/* */

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஆய்வு
X

இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற 18 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில் அரசு துணை சுகாதார நிலையம், சாலைக்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளி மற்றும் இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற 18 ஆவது கட்ட கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில் அரியலூர் மாவட்டத்தில் 17 ஆவது கட்டமாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இது வரை முதல் தவணை தடுப்பூசி 6,38,231 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 4,30,756 நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்துப்பட்டுள்ளது.

18 ஆவது கட்டமாக மாபெரும் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 254 இடங்களிலும், 2 பேரூராட்சிகளுக்குட்பட்ட 7 இடங்களிலும், 2 நகராட்சிகளுக்குட்பட்ட 13 இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 69 இடங்களிலும் என மொத்தம் 343 இடங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.

எனவே முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின் போது, கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புச்செல்வன் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 8 Jan 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்