/* */

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று

பொது இடங்களில் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 3 பேருக்கு புதியதாக கொரோனா ஏற்பட்டுள்ளது.

கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா நோய்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்போ, கடுமையான பாதிப்போ ஏற்படுவதில்லை. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி கொரோனா நோய் தொற்றின் வீரியம் குறைவாக காணப்படும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் 2 தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இதுவரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி (104.43%)ம், 277268 பேருக்கு (106.68%) இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 18-45வயதிற்குட்பட்ட 342100 நபர்களில் இதுவரை 349213 நபர்களுக்கும் (102.08%) இரண்டாம் தவணை தடுப்பூசி 344444 பேருக்கும் (100.69%) போடப்பட்டுள்ளது. 15-18 வயதிற்கு உட்பட்ட 34800 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 35116 நபர்களுக்கு (100.91%) இரண்டாம் தவணை தடுப்பூசி 30807 நபருக்கும் (88.53%) போடப்பட்டுள்ளது. 12-14 வயதிற்கு உட்பட்ட 22100 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 24563 நபர்களுக்கு (111.14%) இரண்டாம் தவணை தடுப்பூசி 17702 நபருக்கும் (80.10%) போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 658900 நபர்களில் 680307 நபர்களுக்கு (103.25%) முதல் தவணை தடுப்பூசியும் 670221 (101.72%) இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டுள்ளது.

கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.

எனவே, கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொது இடங்களில் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Jun 2022 2:22 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  3. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  5. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்