/* */

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த ஆலோசனை கூட்டம்

அரியலூர்மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த  ஆலோசனை கூட்டம்
X

அரியலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ப.மகேஸ்வரி தலைமையில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ப.மகேஸ்வரி தலைமையில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி, 01.01.2022 ஆம் நாளை தகுதிநாளாக கொண்டு அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 149, அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் 2022ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 01.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெற்று வருகிறது.

இச்சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளுக்கென சிறப்பு முகாமானது 13.11.2021 (சனிக்கிழமை) 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 20.11.2021 (சனிக்கிழமை) 21.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு தினங்களில் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் நடைபெற்று முடிவடைந்ததில், சேர்க்கைக்கென 6660 விண்ணப்பங்களும், திருத்தம் செய்திட 1063 விண்ணப்பங்களும், முகவரி மாற்றத்திற்கென 482 விண்ணப்பங்கள், நீக்கம் செய்திட 934 விண்ணப்பங்களும் என மொத்தம் 9139 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், 27.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 28.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் சிறப்பு முகாமானது அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

இச்சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் நீக்கல் போன்ற மனு படிவங்களை அம்மையங்களில் அளித்து பயன்பெறுமாறும், அரியலூர் மாவட்டத்தில் தகுதியுடைய 18 வயதை பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கும், முகவரி மாற்றம், நீக்கம் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை Voter Help Line செயலியினை பயன்படுத்தி பதிவு செய்திடுமாறும், www.nvsp.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் விண்ணப்பங்களை பதிவிடுமாறும், இது குறித்த அனைத்து விபரங்களையும், சந்தேகங்களையும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதை கண்காணித்து மேற்பார்வையிடும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலர் ப.மகேஸ்வரி இன்று (24.11.2021) அரியலூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

மேலும், இச்சிறப்பு சுருக்கத்திருத்த முறை பணிகள் குறித்து ஏதேனும் புகார்கள் இருப்பின் அலுவலக தொலைபேசி எண்.: 044-25674302, கைபேசி எண். 9445252243 மற்றும் er22maptk@gmail.com மின்னஞ்சல் முகவரியில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி, சுவரொட்டிகள், ஒலிபெருக்கி வாகனம் உள்ளிட்டவைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின்ட நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Nov 2021 2:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?