/* */

கல்லூரிகனவு - நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

College Dream - The First Higher Education Career Guide

HIGHLIGHTS

கல்லூரிகனவு - நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
X

மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரிக் கனவு - நான் முதல்வன் கையேட்டினை வழங்கினார்.


அரியலூர் மாவட்டம், விளாங்குடி அண்ணா பல்கலைக்கழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் "கல்லூரி கனவு - நான் முதல்வன்" உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் பயணம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் (30.06.2022) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா அவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர். இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, 12ஆம் வகுப்பு படித்து, மேற்படிப்பிற்கு செல்லவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் "கல்லூரி கனவு - நான் முதல்வன்" உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் படிப்பு முடித்தவுடன் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களிடம் கட்டணம் பெற்று தனியார் அமைப்புகள் மூலம் கல்வி வழிகாட்டி வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு அமைவதில்லை.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் திறமையானவர்கள். இப்பள்ளி மாணவர்கள் படித்து முடித்தவுடன் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் "கல்லூரி கனவு - நான் முதல்வன்" உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை திறனை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என தெளிவுபெற்று சிறந்த மேற்படிப்பு படிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் "கல்லூரி கனவு - நான் முதல்வன்" வழிகாட்டும் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடித்த மாணவர்களுக்கான பல்வேறு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி விவரங்கள் வடிவமைக்கப்பட்டு, தரப்பட்டுள்ளது. இதில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப் படிப்புகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உள்ள உட்பிரிவுகளும் அவற்றிற்கான வேலைவாய்ப்புகளும் விளக்கப்பட்டுள்ளன. மேலும், கல்லூரி கல்விக்கான கடன் பெறுவது எப்படி?, கல்லூரி படிப்புக்கான படிப்பு உதவித்தொகை பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் "கல்லூரி கனவு - நான் முதல்வன்" உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களின் மேற்படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, சிறந்த முறையில் மேற்படிப்பு பயின்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரிக் கனவு - நான் முதல்வன் கையேட்டினை ஆட்சியர் வழங்கினார். பின்னர், மாணவர்களுக்கு துறை வாரியாக சிறப்புரையாளர்களைக் கொண்டு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து சிறப்புரை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமன், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் முனைவர்.லெ.செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர்.கா.ச.மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர் முனைவர்.மான்விழி மற்றும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 30 Jun 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  2. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  3. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  4. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  5. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  6. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  8. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  9. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்