/* */

அரியலூர் மாவட்ட விடுதிகளுக்கான பதிவுச் சான்றிதழ்களை வழங்கிய கலெக்டர்

அரியலூர் மாவட்டத்தில் இல்லங்கள் மற்றும் விடுதிகள் செயல்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட விடுதிகளுக்கான பதிவுச் சான்றிதழ்களை வழங்கிய கலெக்டர்
X

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விடுதிகளுக்கான பதிவுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை டான் போஸ்கோ ஆண்கள் விடுதி, சாவியோ ஆண்கள் விடுதி, அமலா அன்னை பெண்கள் விடுதி மற்றும் தென்னூர் புனித ஜோசப் பெண்கள் விடுதி ஆகிய 4 விடுதிகளுக்கான பதிவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் இல்லங்கள் மற்றும் விடுதிகள் செயல்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் மேற்கண்ட சட்டத்தின்படி பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பதிவு பெறாத நிறுவனங்கள் பதிவு செய்வதற்கு விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டு, தங்களது நிறுவனங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ராஜயோகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 May 2022 7:11 AM GMT

Related News