/* */

விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு

அரியலூர் மாவட்ட விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு.

HIGHLIGHTS

விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு
X

பைல் படம்.

இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி - மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவியருக்கான விளையாட்டு விடுதி - ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான அரியலூர் மாவட்ட அளவிலான தேர்வு 23.03.2022 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 7.00 மணி முதல் நடைபெற உள்ளது.

மாணவர் - 1. தடகளம் 2. இறகுப்பந்து 3. கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கிரிக்கெட் 6. கால்பந்து 7. வாள்சண்டை 8. ஜிம்னாஸ்டிக்ஸ் 9. கைப்பந்து 10. ஹாக்கி 11. நீச்சல் 12. டேக்வோண்டோ 13. வாலிபால் 14. பளுதூக்குதல் 15.கபாடி 16. மேசைப்பந்து 17. டென்னிஸ் 18. ஜீடோ 19. ஸ்குவாஷ் மற்றும் 20.வில்வித்தை

மாணவியர் - 1. தடகளம் 2. இறகுப்பந்து 3. கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கால்பந்து 6. வாள்சண்டை 7. கைப்பந்து 8. ஹாக்கி 9. நீச்சல் 10. டேக்வோண்டோ 11. வாலிபால் 12. பளுதூக்குதல் 13.கபாடி 14. டென்னிஸ் 15. ஜீடோ மற்றும் 16. ஸ்குவாஷ் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர் அதற்கான உரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இளையதள முகவரியில் பூர்த்தி செய்து 22.3.2022 அன்று மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அரியலூர் அவர்களை 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 21 March 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  6. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  7. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...