/* */

அரியலூர் காவல் துறையில் 49 பறிமுதல் வாகனங்கள் ஏலம்

அரியலூர் மாவட்ட காவல் துறையில் மதுகுற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

HIGHLIGHTS

அரியலூர் காவல் துறையில் 49 பறிமுதல் வாகனங்கள் ஏலம்
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட காவல் துறையில் வரும் 10ம் தேதி மது, குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

அரியலூர் மாவட்ட காவல் துறை விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்ட காவல் துறையில் மதுகுற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களை 10.10.2022 ம் தேதி காலை 10.00 மணிமுதல் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) அவர்களின் முன்னிலையில் 48 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு வாகனம் ஆக மொத்தம் 49 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, அரியலூர் மாவட்டம் அவர்களின் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். இதற்கான 9498165793 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பொது ஏலத்தில் கலந்துக் கொள்பவர்களுக்கான ஏலவிதிமுறைகள்; :- மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 10.10.2022 ம் தேதி காலை 10.00 மணிக்கு ஆயுதப்படை மைதானம் அரியலூரில் பொது ஏலத்தில் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 10.10.2022 காலை 08.00 மணிக்கு ரூ1,000/- முன்தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலத்தில் கலந்து கொள்பவருக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம் அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் ஏலத்தொகையுடன் GST–வுடன் சேர்த்து பிற்பகல் 3.00 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் வைப்புத்தொகை கழித்துக்கொள்ளப்படும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்தத் தவறினால் வைப்புத்தொகை திருப்பி தரப்படமாட்டாது. இந்த பொது ஏலத்தில் ரூ:100/-இன் மடங்கில் கேட்கப்படவேண்டும். வாகனத்துடன் வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. 10ம் தேதியன்று நடைபெறும் ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.

பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்தவர்கள் யாரும் கலந்துகொள்ளவோ, ஏலம் கேட்கவோ அனுமதியில்லை. ஏலம் கேட்பவர்கள் அனைவரும் வாகனங்களை 09.10.2022-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Oct 2022 9:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    பேருந்துகளில் படிக்கட்டு பயணத்திற்கு வேட்டு: மதுரை ஐகோர்ட் கிளை...