/* */

அரியலூர்: ஏழை பெண்களுக்கு ரூ.13.20 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம்

அரியலூர் மாவட்டத்தில் 1750 ஏழைபெண்களுக்கு ரூ.13.20 கோடி மதிப்பில் தாலிக்குதங்கத்தை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

HIGHLIGHTS

அரியலூர்: ஏழை பெண்களுக்கு ரூ.13.20 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம்
X

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ப ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவைர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், திருமானூர், ஆண்டிமடம், தா.பழுர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த 740 பெண்களுக்கும், பட்டப்படிப்பு முடித்த 1,010 பெண்களுக்கும் என மொத்தம் 1,750 பெண்களுக்கு ரூ.13.20 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த 13 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.3.25 இலட்சம் நிதியுதவியும், பட்டப்படிப்பு முடித்த 62 ஏழை பெண்களுக்கும் ரூ.50,000/- வீதம் ரூ.32 இலட்சம் நிதியுதவியும் மற்றும் தலா 8 கிராம் வீதம் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கமும் என ஆகமொத்தம் 75 படித்த ஏழை பெண்களுக்கு ரூ.61.25 இலட்சம் மதிப்பில் நிதியுதவியும் மற்றும் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனாக ஏழை பெற்றோரின் கஷ்டம் போக்கப்பட்டுள்ளதுடன், பெண் கல்வி முன்னேற்றம் அடையவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் கோவிட் நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைக்கழுவுதல் உள்ளிட்ட அரசின் கோவிட்; தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதுடன், கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்திலுள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியுள்ளார்கள். இதுபோன்று பொதுமக்களின் நிலை அறிந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பயனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Jan 2022 12:39 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?