/* */

அரியலூர் அருகே ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் தூர்வாரும் பணிகள் : கலெக்டர் ஆய்வு

அரியலூர் அருகே ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே  ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் தூர்வாரும் பணிகள் : கலெக்டர் ஆய்வு
X
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர், கீழக்கொளத்தூர், வடுகப்பாளையம் ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்

ரத்னா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெற்றியூர் வாய்க்கால், கீழக்ககொளத்தூர் வாய்க்கால் மற்றும் வடுகப்பாளையம் வாய்க்கால் ஆகியவை ரூ.1,38,500 மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீர் வள ஆதாரத்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் மொட்டையா பிள்ளை ஏரி உபரிநீர் வாய்க்கால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் தரமாகவும், விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், நீர்வள ஆதாரத்துறை உதவிசெயற்பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் (வளர்ச்சி) ராஜராஜன், வட்டாட்சியர்கள் கிருஸ்ணமூர்த்தி, ராஜமூர்த்தி மற்றும் விவசாயிகள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 12 Jun 2021 6:38 AM GMT

Related News