/* */

ஒரு வார கால ஊரடங்கு வழிகாட்டு நடைமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் : கலெக்டர் வேண்டுகோள்

ஊரடங்கு வழிகாட்டு நடைமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ரத்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஒரு வார கால ஊரடங்கு வழிகாட்டு நடைமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் : கலெக்டர் வேண்டுகோள்
X

அரியலூர் கலெக்டர் ரத்னா

அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுபடி பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள இந்த ஊரடங்கு வரும் 14.06.2021அன்று காலை 6.00 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், இந்த முழு ஊரடங்கு 21.06.2021 அன்று காலை 6.00 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்திரவிடப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. கடைகளில் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளில் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்; காலை 9.00 மணி முதல் மதியம்2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாக பணிகள் அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

தற்போது இதர தொழிற்சாலைகளும் 33% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கிய அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்.

தகவல் தொழிநுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20% பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

வீட்டு வசதி நிறுவனம் வங்கி சாரா நிதி நிறவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களாக கூடுவதையும் தவிர்த்தல் வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும்,பொது மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு,மாவட்ட நிருவாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  7. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  8. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  9. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  10. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?