/* */

அரியலூர்- ஒப்பந்த ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதால் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர்- ஒப்பந்த ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
X

பைல் படம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

அரியலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறையில், ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தகுதியுடையவர்கள் வரும் 28.09.2021-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கோவிட்-19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு மட்டும் பணி செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

6 மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கு D.Pham கல்வி தகுதியுடன் 35-வயதிற்குள் இருக்க வேண்டும். 1 பல் மருத்துவர் பணியிடத்திற்கு பி.டி.எஸ் கல்வி தகுதியுடன் 35-வயதிற்குள் இருக்க வேண்டும். 1 தகவல் செயலாக்க உதவியாளர் பணியிடத்திற்கு B.Sc (CS) / BCA கல்வி தகுதியுடன் 20-35-வயதிற்குள் இருக்க வேண்டும். 1 மாவட்ட தர ஆலோசகர் பணியிடத்திற்கு Dental / AUYSH / Nursing / Social Science / Life insurance with Master Degree in Hospital Administration கல்வி தகுதியுடன் 45-வயதிற்குள் இருக்க வேண்டும். 1 கண் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு Diploma in Optometry Assistance கல்வி தகுதியுடன் 35-வயதிற்குள் இருக்க வேண்டும். 1 பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவத்துடன் 35-வயதிற்குள் இருக்க வேண்டும். 2 தாய்மை துணை செவிலியர் பணியிடங்களுக்கு Diploma in GNM கல்வி தகுதியுடன் 35-வயதிற்குள் இருக்க வேண்டும்.

இப்பணியிடங்கள் முழுவதும் தற்காலிகாமனது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணங்கள் முன்னிட்டும் பணி வரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி தகுதி சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படத்துடன் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட பல்துறை வளாக அலுவலகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 14 Sep 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  2. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  4. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  5. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  6. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்