/* */

அரியலூர்- தூய்மை விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூரில் தூய்மை பாரத விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர்- தூய்மை விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர்  தொடங்கி வைத்தார்
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மை ரத விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.


75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மையின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை சமுதாயத்திற்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, மலக்கசிடு மேலாண்மை, நெகிழி கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

மேலும், கிராம ஊராட்சிகளின் சுகாதாரம் குறித்த தற்போதை நிலை மற்றும் ஒட்டுமொத்த கிராம சுகாதார விபரம் அடங்கிய அட்டவணை தயார் செய்து, ஏதேனும் ஊராட்சி ஒன்றியத்தியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையான கழிவுநீர் மேலாண்மை அணுகுமுறை மூலம், சாம்பல்நிர் மேலாண்மையினை செயல்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை தூய்மை ரத விழிப்புணர்வு வாகனத்தினத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தயார் செய்யப்பட்ட குறும்படங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று இவ்வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் அனைவரும் அரசு தெரிவிக்கும் தூய்மையின் அவசியம் குறித்து, தெரிந்துகொள்வதுடன், அவற்றை நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என மாவட்டகலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி, தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Sep 2021 10:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு