/* */

அரியலூர் மாவட்டத்தில் 33 வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் 33 வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 33 வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து  கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு புதிதாக வாக்குச்சாவடிகள் உருவாக்குதல், வாக்குச்சாவடி அமைவிடம். கட்டிடம் மாற்றம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம், வாக்குச்சாவடியின் பரப்பு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ளவற்றை ஒரே வாக்குச்சாவடியில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதனடிப்படையில் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு, வரைவு வாக்குச்சாவடி பட்டியலானது அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் விளம்பர பலகைகளில் வெளியிடப்பட்டது.

நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு புதிதாக வாக்குச்சாவடிகள் உருவாக்குதலின் பிரிவின் கீழ் புதிய வாக்குச்சாவடிகள் ஏதுமில்லை.

வாக்குச்சாவடி அமைவிடம், கட்டிடம் மாற்றம் பிரிவின் கீழ் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 06 வாக்குச்சாவடிகளும், 150 ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 23 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 29 வாக்குச்சாவடிகளும்,வாக்குச்சாவடி பெயர் மாற்றம் பிரிவின் கீழ் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 02 வாக்குச்சாவடிகளும், வாக்குச்சாவடியின் பரப்பு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ளவற்றை ஒரே வாக்குச்சாவடியில் மாற்றம் செய்தல் கீழ்ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 02 வாக்குச்சாவடிகளும் என 33 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட உள்ளது.

எனவே, அங்கீகரிக்கபப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் ஏதேனும் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்களில் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் இருப்பின் அது குறித்து விண்ணப்பம் அளிக்கும் பட்சத்தில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னூலாப்தீன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, தேர்தல் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Updated On: 22 Sep 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  3. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  4. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  5. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  6. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  8. நாமக்கல்
    பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு...
  9. ஈரோடு
    கோபி அருகே வருவாய்த் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
  10. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!