/* */

அரியலூர் நலவாழ்வு மையங்களில் சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் பணிபுரிய சுகாதார பணியாளர் தேவை. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

அரியலூர் நலவாழ்வு மையங்களில் சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் பணிபுரிய சுகாதார பணியாளர் தேவை

அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் (HWC-HSCs) உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடைநிலை சுகாதார பணியாளர் (Midlevel Health care Provider) பதவியிடங்களின் எண்ணிக்கை 91 (மாறுதலுக்குட் பட்டது), 50 வயது வரை.

தகுதி: செவிலியர் பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing), இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் (நிலை-2) (Multi Purpose Health Worker (Male)/ Health Inspector-Grade-2) பதவியிடங்களின் எண்ணிக்கை 35 (மாறுதலுக்குட் பட்டது), 50 வயது வரை.

தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்), பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப்பாடமாக பெற்றிருக்க வேண்டும், இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் துப்புரவு ஆய்வாளர், கல்வித்தகுதி (அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல்கலைகழகங்கள் காந்தி கிராம், கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைகழகங்களில் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறையால் வழங்கப்பட்ட சான்றிதழ்

விண்ணப்ப படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும (https://nhm.tn.gov.in/) வலைதளத்தில் வேலைவாய்ப்பு (Career Section) பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் புகைப்படத்துடன் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட பல்துறை வளாக அலுவலகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-621704 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டுமெனவும் மேலும் விவரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் (https://nhm.tn.gov.in) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Dec 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  2. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  3. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  6. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  10. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!