/* */

அரியலூர் நகராட்சி தலைவரிடம் ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் கோரிக்கை மனு

அரியலூர் நகர்மன்ற தலைவரை சந்தித்து நகராட்சி ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் நகராட்சி தலைவரிடம் ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் கோரிக்கை மனு
X

நகர்மன்ற தலைவரிடம் மனு அளித்த சுகாதார பணியாளர்கள்.

அரியலூர் நகராட்சி ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் நகராட்சி அலுவலகம் சென்று நகர்மன்றத் தலைவர் சாந்திகலைவாணன் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

சங்க தலைவரும் உள்ளாட்சித்துறை சம்மேளன மாநில செயலாளருமான த.தண்டபாணி கோரிக்கைகளை விளக்கிப் பேசும்போது, திருச்சி தொழிலாளர் துறை துணை ஆணையர் முன்பு 16.07.2021 இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கான ஊதிய அரியர்ஸ் பணம், நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களான இபிஎப் இருப்புக் கணக்கு முறையாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்றுவதாக நகராட்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டவைகளை நிறைவேற்றாமல் அதிககாலம் கடத்தி வருவதை குறிப்பிட்டு,விரைவில் நிறைவேற்றிட தாங்கள் தலையிட வேண்டுமென த.தண்டபாணி நகர் மன்ற தலைவரை கேட்டுக் கொண்டார்.

இக்கோரிக்கைகள் மீது நகராட்சி அதிகாரிகளுடன் பேசி ஒரு வாரத்திற்குள் மீண்டும் தங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசுவதாக நகர்மன்றத் தலைவர் சாந்திகலைவாணன் உறுதி அளித்தார். பேச்சுவார்த்தையின் போது வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சங்க நிர்வாகிகள் S. மாரியப்பன், ரெ. நல்லுசாமி, கு. சிவஞானம், ரா. சுப்பிரமணியன், மு. அமிர்தவள்ளி, அ. பொன்னம்மாள், ஆ.க.அஞ்சலை, D.விஜி, ஆறுமுகம், அண்ணாதுரை, த. பானுமதி உட்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்