/* */

டிப்பர் லாரி மோதி டிபன்கடை உரிமையாளர் பலி : பொது மக்கள் சாலை மறியல்

அரியலூர் புறவழிச்சாலையில் டிப்பர்லாரி மோதியதில் டிபன்கடை உரிமையாளர் பலியான நிகழ்வையடுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

டிப்பர் லாரி மோதி டிபன்கடை உரிமையாளர் பலி : பொது மக்கள் சாலை மறியல்
X

அரியலூர் புறவழிச்சாலையில் பெண்ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ராவுத்தன்பட்டி பிரிவுபாதையருகே வந்தபோது, சற்றுமுன் பெய்த மழையால் சாலையின் களிமண் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு, வண்டிஓட்ட சிரமம் ஏற்பட்டதால் வானத்தை சாலையேரத்தில் நிறுத்தி சரிசெய்துள்ளார். இதனை பார்த்த எதிர்புறம் டிபன் கடை வைத்திருக்கும் முருகேசன் என்பவர், அப்பெண்ணுக்கு சென்று உதவி செய்துள்ளார்.

அப்போது அவ்வழியே வேகமாக வந்த சிமெண்ட் ஆலைக்கு இயக்கப்படும் டிப்பர்லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் முருகேசனை ஸ்கூட்டியுடன் சேர்த்து லாரி இழுந்து சென்றதில், முருகேசன் இரண்டு கால்களையும் இழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராவுத்தன்பட்டி கிராம பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிமெண்ட் ஆலைக்கு இயக்கப்படும் டிப்பர் லாரிகளை தனி பாதையில் இயக்க வேண்டும், வேகதடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை இதுவரை மாவட்ட நிர்வாகம் ஏற்று செயல்படுத்தவில்லை என்றும், இதனால் ஏற்படும் சாலைவிபத்துக்களால் பொதுமக்களில் உயிரிழப்பு, மற்றும் உடல் உறுப்புகளை இழத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, பொதுமக்களிடம் பேசி உயரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இருகால்களையும் இழந்த டிபன்கடை உரிமையாளர் முருகேசன் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்க கொண்டுசெல்லப்பட்டார். அரியலூர் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 12 Jun 2021 4:23 PM GMT

Related News