/* */

அரியலூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5 மணி வரை 78.06 % வாக்குப்பதிவு

அரியலூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி வரை 78.06 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5 மணி வரை 78.06 % வாக்குப்பதிவு
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 13 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 16 பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் செந்துறை ஒன்றியம் – கீழமாளிகை, ஜெயங்கொண்டம் ஒன்றியம் - உட்கோட்டை, ஆண்டிமடம் ஒன்றியம் - அழகாபுரம் மற்றும் நாகம்பந்தல் ஆகிய 4 வார்டு உறுப்பினர் பதிவி இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், அரியலூர் - ஓட்டக்கோவில் (வார்டு 6), திருமானூர் - வெற்றியூர் (வார்டு 6), கோவிலூர் (வார்டு 1), செந்துறை - தளவாய் (வார்டு 9), சிறுகடம்பூர் (வார்டு 3), ஜெயங்கொண்டம் - ஜெ.தத்தனூர் (வார்டு5), ஆண்டிமடம் - இடையக்குறிச்சி (வார்டு 2), இலையூர் (வார்டு 9), தா.பழூர் - அம்பாபூர் (வார்டு 8) ஆகிய 9 வார்டு உறுப்பினர் பதிவி இடங்கள் ஆக மொத்தம் ௧௨ பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறுகிறது.

இன்று அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி ஆர்வத்தோடு, பொது மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

இன்று நடைபெறும் தேர்தலில் 5669 ஆண் வாக்காளர்களும், 5663 பெண் வாக்காளர்களும் சேர்த்து 16,332 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

5 மணி நிலவரப்படி 4279 ஆண் வாக்காளர்களும், 4567 பெண் வாக்காளர்களும் சேர்த்து 8846 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

அரியலூர் ஒன்றியத்தில் 78.83 % வாக்குகளும், திருமானூர் ஒன்றியத்தில் 84.97 % வாக்குகளும், செந்துறை ஒன்றியத்தில் 65.51 % வாக்குகளும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 81.57 % வாக்குகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 76.35% வாக்குகளும், தா.பழூர் ஒன்றியத்தில் 79.86% வாக்குகளும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் சராசரியாக 78.06% வாக்குகள் பதிவாகியது.

வாக்காளர்கள் வரிசையில் நின்று, காத்திருத்து தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். வாக்குச்சாவடி மையங்களில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 9 Oct 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...