/* */

அரியலூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்

அரியலூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால்கள் செய்வதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் (கால்கள் மட்டும்) வழங்கிட தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கான அளவீடு முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட (விபத்து மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் கால்களை இழந்த) மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் (கால்கள் மட்டும்) வழங்கிடும் பொருட்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

இப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் மூலமாக அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக்கொள்றுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

முகாமில் கலந்துகொண்ட 72 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு தேவையான செயற்கை கால்கள் செய்வதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அண்மையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்ட முகாமில் விபத்தின் மூலம் கையினை இழந்த மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்ற சிறுவன் தனக்கு உதவி வேண்டி மனு அளித்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற முகாமில் இச்சிறுவனுக்காக மட்டும் செயற்கை கை பொருத்துவதற்காக மாவட்டகலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுரையின்படி, அளவீடு செய்து, செயற்கை கை பொறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Oct 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!