/* */

அரியலூர் மாவட்டத்தில் 16 உள்ளாட்சி பதவிகளுக்கு 56 பேர் போட்டி

அரியலூர் மாவட்டத்தில் 16 ஊரக உள்ளாட்சித் பதவிகளுக்கு 56 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 16 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.தா.பளூர் ஊராட்சி ஒன்றியத்தில் மனகெதி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மகேஷ்வரி, புண்ணியமூர்த்தி, பழனிவேல், செல்வி ஆகிய 4பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தா.பளூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வினோத்கண்ணன், சித்ரா, ராசாராம், கலாநிதி, செல்வராஜன் ஆகிய 5பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சாந்தி, குமாரி, அம்சவள்ளி, அம்சாயாள், சசிகுமாரி, பிரவினா, மீனா ஆகிய 7பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் அம்பாபூர் ஊராட்சி (வார்டு 8)உறுப்பினர் பதவிக்கு 4பேரும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓட்டக்கோவில் ஊராட்சி (வார்டு 6)உறுப்பினர் பதவிக்கு 4பேரும்,திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோவிலூர் ஊராட்சி (வார்டு 1) உறுப்பினர் பதவிக்கு 4பேரும், வெற்றியூர் ஊராட்சி (வார்டு 6) உறுப்பினர் பதவிக்கு 4பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உட்கோட்டை ஊராட்சி (வார்டு 10) உறுப்பினர் பதவிக்கு வெங்கடேஸ்வரன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். தத்தனூர் ஊராட்சி (வார்டு 5) உறுப்பினர் பதவிக்கு நந்தினி, கவிதா ஆகிய 2பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் கீழமாளிகை ஊராட்சி (வார்டு 4) உறுப்பினர் பதவிக்கு பாஸ்கர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். சிறுகடம்பூர் ஊராட்சி (வார்டு 3) உறுப்பினர் பதவிக்கு லெனின், ரமேஷ், தங்கவேல், சிவந்தி, ரவி ஆகிய 5பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். தளவாய் ஊராட்சி (வார்டு 9) உறுப்பினர் பதவிக்கு ராஜேஸ்வரி, ராஜா, தருமன் ஆகிய 3பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் அழகாபுரம் ஊராட்சி (வார்டு 8) உறுப்பினர் பதவிக்கு 3பேர்,இலையூர் ஊராட்சி (வார்டு 9) உறுப்பினர் பதவிக்கு 4பேர் இடையாக்குறிச்சி ஊராட்சி (வார்டு 2) உறுப்பினர் பதவிக்கு 4பேர் ,நாகம்பந்தல் ஊராட்சி (வார்டு 6) உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

3 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடத்திற்கு 16பேரும் மற்றும் 11 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 40 பேரும் என மொத்தம் 56 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

Updated On: 23 Sep 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...