/* */

அரியலூர் : மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க 20 சிறப்பு முகாம்

Abled Person - அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் 20 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் : மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க 20 சிறப்பு முகாம்
X

பைல் படம்.

Abled Person - அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID Card) வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு அரியலூர் குறுவட்டத்தில் 11.08.2022 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்: 17, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர் என்ற முகவரியிலும், குவாகம் குறுவட்டம் த்தில் 12.08.2022 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, இ.வாரியங்காவல் ஆகிய இடங்களில் இரண்டாம் கட்டமாக நடைறெவுள்ளது.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Card) பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவேளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம்; கட்டமாக 02 இடங்களில் நடைபெறும் முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID Card) பெறாதவர்கள் மட்டும் உரிய ஆவனங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Aug 2022 5:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  3. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  5. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  6. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  7. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  10. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...