/* */

விடியலை கண்டு பயமா? முதல்வர் ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தூங்க முடியாமல்தவிக்கிறேன் என கூறிய முதல்வர் முக ஸ்டாலினுக்கு விடியலை கண்டு பயமா? என நெட்டிசன்கள் கலாய்க்க தொடங் உள்ளனர்.

HIGHLIGHTS

விடியலை கண்டு பயமா? முதல்வர் ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்
X

முதல்வர் ஸ்டாலின்.

விடியலைக் கண்டு பயமா? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி உள்ளனர்.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி‌.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த 9-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி‌.மு.க‌.வின் 15 -வது உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரையிலான புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அத்துடன் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் தி.மு.க. பொதுச்செயலாளர், தி.மு.க.பொருளாளர், ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் நான்கு தணிக்கை குழு உறுப்பினர் பதவிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஹாட் டாபிக் பேச்சு

கூட்டத்தில் சைவ அசைவ விருந்துகள் பிரம்மாண்டமாக படைக்கப்பட்டது. நிறைவாக பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தன்னை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக நன்றி தெரிவிப்பார் என எதிர்பார்த்த சூழலில் அவர் தனது கட்சியினரை பற்றி குறிப்பாக மூத்த நிர்வாகிகளை பற்றி ஆதங்கமாக பேசி இருப்பது தான் அவரது பேச்சின் உச்சகட்டம் ஆகும். அவர் கட்சியின் எதிர்கால திட்டங்கள் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி சந்திக்க வேண்டும் ஆட்சியின் மூலம் மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகள் பற்றி எல்லாம் விரிவாக பேசிவிட்டு கூடுதலாக தனது கட்சியினரின் செயல்கள் பற்றி பற்றியும் குறிப்பிட்டார். அதுதான் இப்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

தி.மு.க. பொதுக்குழு நிறைவு பெற்று இன்றுடன் கிட்டத்தட்ட 7 நாட்கள் உருண்டோடி விட்டது. ஆனால் ஸ்டாலின் பேசிய பேச்சின் தாக்கம் இன்னும் குறையவில்லை. ஸ்டாலின் அப்படி என்னதான் பேசினார்.

தூங்காத ஸ்டாலின்

நான் ஒரு பக்கம் தி.மு.க. தலைவர் இன்னொரு பக்கம் தமிழகத்தின் முதல் அமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பார்களே அதைப்போல இருக்கிறது என நிலைமை. இத்தகைய சூழலில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல தி.மு.க. நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும் காலையில் நம்மவர்கள் இன்று எந்த புதுப்பிரச்சினையையும் உருவாக்கி இருக்க கூடாதே என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறேன்.இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட செய்து விடுகிறது என குறிப்பிட்டு பேசினார் மு. க .ஸ்டாலினின்.

பவளவிழா கட்சி

இந்த பேச்சு அவரது இதயத்தின் அடி மனதில் இருந்து வெளிவந்ததா அல்லது அரசியலுக்காக அப்படி பேசினாரா என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் 75 ஆண்டுகால பவள விழா கொண்டாட இருக்கிற ஒரு கட்சியின் தலைவராக தமிழகத்தின் முதல்வராக அவர் இருப்பதால் அவரது இந்த பேச்சு சாதாரண அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை மட்டுமல்ல அரசியல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பாத சாமானியர்கள் கூட உன்னிப்பாக கவனித்து அதற்கு தகுந்தார் போல் தங்களது எண்ண ஓட்டங்களை பேசி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதாவுடன் ஒப்பீடு

அப்படி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட அதாவது நெட்டிசன்கள் ஸ்டாலினை கலாய்த்தும்,பாராட்டியும் புகழ்ந்தும் ,இகழ்ந்தும் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் தான் இன்று நமது பதவி இருக்குமா இல்லையா என்ற ஒரு வித தயக்கத்துடன் கண் விழிப்பார்கள். ஆனால் இன்று தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அமைச்சர்களால் என்ன பிரச்சனை வருமோ தெரியவில்லையே என்ற பயத்தில் உள்ளார். இது ஒரு நெட்டிசனின் கலாய்ப்பு.

நெட்டிசன்கள் கலாய்ப்பு

விடியல் விடியல் என சொல்லி கடைசியில தலைவர் வாயாலே விடிஞசா பயமா இருக்குனு சொல்ல வச்சிட்டிங்களேடா படுபாவிகளா ? என்று என்று இன்னொர நெட்டிசன் குறிப்பிட்டு இருக்கிறார். உதாரணத்திற்கு நான் இந்த இரண்டை பதிவிட்டு உள்ளோம். இதுபோல் இன்னும் பதிவிட கூட அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு கூட அவர் மீது வசைபாடி இருக்கிறார்கள். சிலர் புகழ்ந்து இருக்கிறார்கள். ஸ்டாலினின் இந்த பேச்சு பற்றி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வினரை ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் தான் அவர் இப்படி விரக்தியாக பேசி இருக்கிறார். தி.மு.க.வினரின் அராஜகத்திற்கு இதுவே உதாரணம் என்று குறிப்பிட்டார்.

பொதுமக்கள் எழுப்பும் கேள்வி என்னவென்றால் ஒரு முதலமைச்சரால் தனது அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர்கள் மக்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது அவருக்கு தெரிய வேண்டாமா? முதலமைச்சருக்கு தான் பொறுப்பு உள்ளது.ஆதலால் அவர் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர இப்படி பயப்படுவது போல் பேசி இருக்கக்கூடாது என கருத்து தெரிவிக்கிறார்கள்.

சாட்டையை சுழற்ற வேண்டாமா?

கடந்த முறை ஒரு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது நான் சர்வாதிகாரி போன்றவன் தவறு செய்பவர்கள் மீது எப்படி வேண்டுமானாலும் நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஆனால் இப்போது அதே ஸ்டாலின் சர்வாதிகாரியாக இருந்து தனது சாட்டையை சுழற்றுவதற்கு பதிலாக அமைச்சர்களை கெஞ்சி கேட்டுக் கொள்வது போல் இருக்கிறது. அவரது பேச்சு இதுதான் பொதுவான ஒரு கருத்தாக உள்ளது.

இன்னும் சில பொதுமக்களோ ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் பள்ளி மாணவர்கள் போல் நடத்தப்பட்டார்கள். தவறு செய்த அமைச்சரை எப்போது ஜெயலலிதா தூக்குவார் என்றே தெரியாது. அதனால் நிர்வாகமும் ஆட்சியும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது போல் தெரிந்தது. ஆனால் ஸ்டாலின் அதுபோல் செய்யாமல் என்னை துன்பப்படுத்தாதீர்கள் என்று கெஞ்சி இருப்பது அவரது இயலாமையை காட்டுகிறது என கூறுகிறார்கள்.

விடியா அரசா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினின் முக்கியமான பிரச்சாரமே இருளில் தவிக்கும் தமிழக மக்களுக்கு விடியல் தரப் போகிறோம் என்பதுதான். ஸ்டாலின் தான் வரப்போறாரு விடியல் தரப் போறாரு என பேனர்கள் எல்லா இடமும் வைக்கப்பட்டன. அதனாலேயே இன்று வரை அ‌தி.மு.க.வினர் தி.மு.க. ஆட்சியின் மீதான எதிர்மறை கருத்தாக விடியா அரசு என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆனால் அதே தி.மு.க. ஆட்சியில் விடிந்தால் நிம்மதி இல்லை என பொருள் படும் வகையில் கட்சி மற்றும் ஆட்சியின் தலைவரான முதல்வரே பேசி இருப்பது நெட்டிசன்கள் கலாய்ப்பதிலும் நியாயம் இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. எது எப்படியோ மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதை போல தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொதுக் குழுவில் பேசிய பேச்சு நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளாகி இருக்கிறது என்பதே உண்மை.

Updated On: 16 Oct 2022 11:08 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...