/* */

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கூடுதலாக ஒரு ரயில் சேவை

Tirupati Special Train -தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு திருச்சி வழியாக கூடுதலாக ஒரு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கூடுதலாக ஒரு ரயில் சேவை
X

Tirupati Special Train -திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு திருச்சி வழியாக கூடுதலாக ஒரு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் உலகின் மிகப் பணக்கார கடவுளாக கருதப்படுகிறார். திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து தான் பக்தர்கள் அதிக அளவில் செல்கிறார்கள். ஆனால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசிக்க செல்வதற்கு போதுமான ரயில் வசதி கிடையாது‌. மதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இருந்து வாராந்திர ரயில்கள் தான் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை செல்லும் ரயிலிலும் திருப்பதிக்காக சில இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன .இந்த நிலையில் திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக இந்திய ரயில்வே கூடுதலாக ஒரு ரயில் சேவை தற்காலிகமாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த ரயில் சேவை பற்றிய விபரம் வருமாறு:-

இந்த ரயில் சேவை மதுரையில் இருந்து திருச்சி வழியாக தெலுங்கானா மாநிலத்தின் கச்சக்குடாவிற்கு சிறப்பு கட்டண ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தென் மத்திய ரயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ளது. அதன்படி கச்சக்குடா- மதுரை வாராந்திர சிறப்பு கட்டண ரயில் வண்டி எண் (07191) அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது.

மறு மார்க்கத்தில் மதுரை- கச்சகுடா சிறப்பு கட்டண ரயில் வண்டி எண் (07192 )அடுத்த மாதம் 9-ம் தேதியில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 28ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5. 30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.05 மணிக்கு கச்சகுடா ரயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால் குடா, நலகொண்டா, மல் காஜீரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி. ஒரு இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி. ஐந்து மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் 7 தூங்கும் வசதி பெட்டிகள், மூன்று பொதுபெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் அதிகமாக இருக்கும் என ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கட்டண ரெயில்களுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்தே அதன் சேவை நீடிக்கப்படும் என தெரிகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 31 Oct 2022 4:37 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...