அடடே ....அப்படிங்களா !!! திருமண அழைப்பிதழில் இதையும் தெரிஞ்சுக்கணும்
இப்ப எல்லாம் திருமண அழைப்பிதழ்கள் டிசைன் டிசைனா வருது. பத்திரிக்கையை கையில வாங்கி நாம முதல்ல பாக்கறது தேதியும் இடமும்தான்
HIGHLIGHTS

மாதிரி படம்
அடடே ....அப்படிங்களா !!! இப்ப எல்லாம் திருமண அழைப்பிதழ்கள் டிசைன் டிசைனா வருது...பத்திரிக்கையை கையில வாங்கி நாம முதல்ல பாக்கறது ...
எந்த தேதி... எந்த கிழமை... எந்த இடம் ... அப்புறம் தான் மாப்பிள்ளை யாரு பொண்ணு யாரு அவங்க தகுதி என்ன அப்படிங்கறதெல்லாம் பார்க்கிறோம்.
.ஆனா அந்த பொண்ணு மாப்பிள்ளை பேருக்கு முன்னால் திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி, திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி, அப்படி எல்லாம் போட்டு இருக்கிறதை நாம கூர்ந்து கவனிக்கிறதே இல்ல ...பெயருக்கு முன்னால ஒரு மரியாதைக்காக போடப்பட்ட வார்த்தைன்னு நினைச்சுக்குறோம் ,அப்படி இல்லைங்க...
திருவளர்ச்செல்வன், திருவளர்ச் செல்வி என்று பெயருக்கு முன்னால போட்டு இருந்தாங்கன்னா. அந்த வீட்டுல அடுத்து திருமணத்துக்கு பொண்ணோ மாப்பிள்ளையோ தயாரா இருக்காங்கன்னு அர்த்தம். திருநிறைச் செல்வன் திருநிறைச்செல்வி என்று பெயருக்கு முன்னால் போட்டிருந்தா...எங்க வீட்டுல இதோடு திருமணம் பேச வேறு எவரும் இல்லைன்னு குறிப்பதாகும் ..
அந்தக் குடும்பத்துல இந்த திருமணத்துக்கு பிறகு... பொண்ணோ மாப்பிள்ளையோ தயாரா இருக்காங்களா இல்லையான்னு .இதிலிருந்து தெரிஞ்சுக்கணும் என்பதற்காக..பெரியவங்க இப்படி குறிப்பிட வச்சுருக்காங்க ... இது உங்களுக்கு தெரிஞ்சுருக்கலாம் ஆனா எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியல...உங்களுக்கு தெரிஞ்ச ஒண்ணா இருந்தாலும்.. மீண்டும் நினைவு படுத்தவாவது இந்தப் பகிர்வு உதவும் இல்லீங்களா !!!