/* */

அதிமுக உட் கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது: தலைமை அதிரடி அறிவிப்பு

அதிமுக உட்கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று அதிமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அதிமுக உட் கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது: தலைமை அதிரடி அறிவிப்பு
X

ஏழாம் தேதி அதிமுக உட்கட்சி தேர்தல் தலைமை அறிவிப்பு

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டள்ளது. 3ம்தேதி (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. 4ம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 6ம்தேதி கடைசி நாள் என்று அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் 7ம்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வரும் 8-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்றே முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இந்த திடீர் அறிவிப்பால் என்ன செய்வது எப்படி செய்வது என்று தெரியாமல் பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் தடுமாறுகின்றனர். இருந்த போதிலும் அதிமுக கட்யினருக்கு மீண்டு்ம் ஒரு தீபாவளி தொடங்கியுள்ளது.

அதிமுக தேர்தல் ஆணையாளர்களாக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 2 Dec 2021 6:45 AM GMT

Related News