/* */

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பரபரப்பு: பேனரில் ஓ.பி.எஸ் படம் கிழிப்பால் அதிர்ச்சி..!

சென்னையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் 50 வது ஆண்டு பொன்விழா பேனரில் ஓ.பி.எஸ் படம் கிழிக்கப்பட்டது தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

HIGHLIGHTS

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பரபரப்பு: பேனரில் ஓ.பி.எஸ் படம் கிழிப்பால் அதிர்ச்சி..!
X
அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பி.எஸ் படம் பொறித்த பேனர்.

அ.தி.மு.க. முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இருபிரிவாக உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இவர்களில் யார் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவது என போட்டி வலுத்துள்ளது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்தும் பேசி கொள்ளாமல் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தனர்.

அப்போது தொண்டர்களில் ஒரு பிரிவினர் கண்டன கோஷம் போட்டதால், அதிர்ந்து போன ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். இதனை தொடர்ந்து, இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நின்றபடி, தொண்டர்களை பார்த்து கை அசைப்பது போல பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் படங்களும் இடம்பெற்று இருந்தன. அதில், ஓ.பி.எஸ் படம் கிழிக்கப்பட்டு இருந்தது தொண்டர்கள் இடையே பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

Updated On: 27 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்