அ.தி.மு.க., பொதுக்குழுவில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் பங்கேற்பு: இருதரப்பு தொண்டர்கள் போட்டி கோஷத்தால் பரபரப்பு..!

AIADMK News Today - ஒற்றை தலைமை கோரிக்கையால் எழுந்த பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழுவில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் பங்கேற்றனர். அப்போது, இருதரப்பு தொண்டர்கள் போட்டி கோஷத்தால் அரங்கம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அ.தி.மு.க., பொதுக்குழுவில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் பங்கேற்பு: இருதரப்பு தொண்டர்கள் போட்டி கோஷத்தால் பரபரப்பு..!
X

அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் தவிர்க்க சென்னை வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டப வாயில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்.

AIADMK News Today - அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்திற்கு ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது வாகனங்களும் ஒன்றாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அறிவித்தபடி தொண்டர்கள் உற்சாகத்தால் களைகட்டியது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு இடையே மோதல் நீடித்த நிலையில், பரபரப்பான சூழலில் மண்டபம் காட்சியளித்தது.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி வந்த காரின் மீது கூடை, கூடையாக தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். பொதுக்குழு மேடையில் 80 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் இரு தரப்பினரின் சார்பிலும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷமிட்டனர். அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் வரும்போது எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் எனவும், வேண்டாம், வேண்டாம் இரட்டை தலைமை வேண்டாம் எனவும் கோஷம் இட்டனர். இதனால், அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோஷத்தால் அதிர்ச்சி அடைந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மேடைக்கு ஏறி விட்டு அதே வேகத்தில், கீழே இறங்கி விட்டார்.

பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறை. வருகை பதிவேடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள போதும், இரு மாவட்ட உறுப்பினர்களை தவிர எந்த உறுப்பினரும் கையெழுத்திடவில்லை. கருப்பு சீருடை அணிந்த அ.தி.மு.க தனி பாதுகாவலர்கள் மண்டபம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தொண்டர்கள் அமைதி காக்கும்படி, முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசி சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார். இதனால் பொதுக்குழு, செயற்குழு கூட்ட அரங்கம் தொடக்கம் முதல் பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது.

இதற்கிடையில், தொண்டர்கள் ஆவேசமான மனநிலையை கருத்தில் கொண்டு, அசம்பாவிதம் தவிர்க்க காவல்துறையினர் இரண்டு ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 July 2022 10:50 AM GMT

Related News

Latest News

 1. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
 3. உடுமலைப்பேட்டை
  உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
 4. தூத்துக்குடி
  தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
 5. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
 6. நாமக்கல்
  சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
 7. தமிழ்நாடு
  காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
 8. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
 9. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
 10. வந்தவாசி
  திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்