/* */

9 பேர் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக நியமனம்

9 பேர் தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

9 பேர் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக நியமனம்
X

தி.மு.க.வின் அண்ணா அறிவாலயம். பைல் படம்.

ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 9 பேர் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் கிளைக் கழகம், வட்ட செயலாளர்கள் பதவிகளில் தொடங்கி தி.மு.க. தலைவர் பதவிக்கு வரை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. தலைவராக மு. க. ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி. ஆர். பாலு, முதன்மைச் செயலாளராக கே. என். நேரு ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல துணைப் பொதுச் செயலாளர்கள் பதவிக்கு கனிமொழி எம்.பி. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தி.மு.க. சட்ட விதி 26 பிரிவு 1-ன் படி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக தலைவர்.மு க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி. ஆர். பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆர் எஸ். பாரதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

இதேபோல ஆற்காடு வீரா சாமி, டி. கே. எஸ். இளங்கோவன், தயாநிதி மாறன், சுப.தங்கவேலன், எஸ். எஸ்.பழனி மாணிக்கம், கரூர் கே.சி. பழனிசாமி, கோவை மு. கண்ணப்பன், எல். கணேசன் எம். ஆர். கே பன்னீர்செல்வம், பொன். முத்துராமலிங்கம் திருச்சி சிவா, மு. பெ. சாமிநாதன்,எல். முக்கையா, திருச்செங்கோடு எம். கந்தசாமி, கும்மிடிப்பூண்டி கி. வேணு,பெ. குழந்தை வேலு, குத்தாலம் கல்யாணம் ஆகியோரும் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபோது அவருக்கு நிழலாக உடன் இருந்தவர் ஆற்காடு வீராசாமி. முரசொலி மாறன் கருணாநிதியின் மனசாட்சி என்றால் கருணாநிதியின் குரலாக ஒலித்தவர் ஆற்காடு வீராசாமி. வயது முதிர்வின் காரணமாக அவருக்கு கட்சியில் முக்கிய பதவி ஏதும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆணையராக அவர் செயல்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இப்போது அவருக்கு மீண்டும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது .இதுபோல கரூர் கே.சி. பழனிசாமியும் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் .அவருக்கும் புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பதவி என்பது மிகவும் முக்கியமான பதவியாகும். கட்சி ரீதியான முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் இந்த குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Nov 2022 6:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  2. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  3. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  4. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  7. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  9. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  10. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?