7 ஆண்டு இழுபறிக்கு பின், விசைத்தறி கூலி உயர்வுக்கு தீர்வு

ஏழு ஆண்டு இழுபறிக்கு பின், விசைத்தறி கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
7 ஆண்டு இழுபறிக்கு பின், விசைத்தறி கூலி உயர்வுக்கு தீர்வு
X

பைல் படம்.

திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள், 2014ம் ஆண்டிலிருந்து வழங்கப்படாத கூலி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, கடந்த ஆறு மாதங்களாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இருப்பினும், கூலி உயர்வுக்கு தீர்வு ஏற்படாத சூழலில், விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தாங்களாகவே முன்வந்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இறுதி முடிவும் எட்டப்பட்டது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், திருப்பூர் கலெக்டர் வினித் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சோமனூர் ரகங்களுக்கு, 23 சதவீதம், பல்லடம் மற்றும் பிற ரகத்துக்கு, 20 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது; இந்த கூலி உயர்வு, ஓராண்டுக்கு மட்டுமே என முடிவு எடுக்கப்பட்டது. விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த உடன்படிக்கைக்கு சம்மதித்தனர். வரும், டிசம்பர் முதல் தேதி, கூலி உயர்வு அமலுக்கு என அறிவிக்கப்பட்டது.

Updated On: 25 Nov 2021 3:30 PM GMT

Related News