/* */

500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை; உழவுத் தொழிலை உன்னதப்படுத்திய திருமண விழா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், 500 கிலோ காய்கறிகளால் அமைக்கப்பட்ட மணமேடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

HIGHLIGHTS

500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை; உழவுத் தொழிலை உன்னதப்படுத்திய திருமண விழா
X

பல்லடத்தில், காய்கறியால் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தல். 

கோவை மாவட்டம், அரசூரைச் சேர்ந்த ராமசாமி - ஆனந்தி தம்பதியர் மகன் முத்துக்குமார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் - சரஸ்வதி தம்பதியர் மகள் கீர்த்தனா ஆகியோருக்கு பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் திருமணம் நடந்தது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனாவின் பெற்றோர், உழவுத் தொழிலை முன்னிறுத்தும் வகையில், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையை அமைத்திருந்தனர்.

மண்டபத்தின் நுழைவாயில் வாழைமரம் மற்றும் தென்னங்கீற்றுகளால் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணமேடை, பூசணி, முட்டைகோஸ், காலிபிளவர், வெண்டைக்காய், முருங்கை, கேரட், பாகல், புடலை உள்ளிட்ட பல்வேறு வகை காய்களில், 500 கிலோ எடையிலும், கரும்பு மற்றும் வாழை இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

உழவுத் தொழிலை முன்னிறுத்தும் வகையில் ஓவியங்களும், மணமேடையின் மேற்புறம், 'உழவு என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தன. வண்ண விளக்குகள், பல வகையான மலர்கள் மற்றும் பேனர்களால், ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்கள் மத்தியில், விவசாய தொழிலை முன்னிறுத்தும்படி நடந்த இத்திருமணம், பலராலும் பாராட்டு பெற்றது.

Updated On: 20 Sep 2023 5:10 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  2. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  3. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  4. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  7. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்