சென்னை அருகே காட்டுப்பள்ளியில் மேலும் 2 புதிய கப்பல் கட்டும் தளங்கள்

‘தற்சார்பு இந்தியா மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களின் அடிப்படையில் மேலும் 2 புதிய கப்பல் கட்டும் தளம் அமையவுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னை அருகே காட்டுப்பள்ளியில் மேலும் 2 புதிய கப்பல் கட்டும் தளங்கள்
X

(பைல் படம்)

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அன்ட் டி தனியார் நிறுவனத்தின் மூலம் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கும் பணி திங்கள் கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை எண்ணூர் அருகே காட்டுப்பள்ளி கடலோர கிராமத்தில் எல் அண்ட் டி தனியார் நிறுவனம் சார்பில் கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்திய கடலோர காவல் படைகளுக்கான கப்பல்கள் கட்டும் பணி, கப்பல்கள் பழுது பார்க்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது மத்திய அரசின் ‘தற்சார்பு இந்தியா மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களின் அடிப்படையில் மேலும் இரண்டு புதிய கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் எல்என்டி நிறுவனம் இடையே அண்மையில் கையெழுத்தானது. இதனை எடுத்து புதிய கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது

இதில் எல் அன்ட் டி நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சந்தீப் நைதானி கலந்துகொண்டு கடற்படை போர்க்கப்பலை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.இது காட்டுப்பள்ளி எல் அன்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தின் மூலம் மூலம் உருவாக்கப்படும் முதல் இந்திய கடற்படை போர்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்நோக்கு கப்பல்களுக்கான அனைத்து முக்கிய இயந்திரங்கள், துணை உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும். இதன்மூலம் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கூடுதல் உத்வேகத்தை அளிக்கும். இந்தக் கப்பல்கள், இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டவுடன், கடல்சார் கண்காணிப்பு, ரோந்துப் பணி, பேரிடர் நிவாரணம் மற்றும் பல்வேறு பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும். மேலும் தன்னிச்சையாக, தொலைதூரத்தில், ஆளில்லா கப்பல்களை இயக்க வழிவகை செய்யப்படும்.

இந்நிகழ்ச்சியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கிரண் தேஷ்முக், தஅசோக் கேதன் மற்றும் இந்திய கடற்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .

காட்டுப்பள்ளி கப்பல் கட்டும்தளம் ஓர் மீள் பார்வை..

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில், 'எல் அண்ட் டி' நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்த கப்பல் கட்டும் தளத்தில் இருந்து இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய ரோந்து கப்பல்கள் தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று நவீன காலத்துக்கு ஏற்ப கப்பல்கள் பழுது நீக்கப்பட்டு, புனரமைப்பு செய்தும் கொடுக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்க போர்க்கப்பல் வருகை இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த 'யூ.எஸ்.என்.எஸ். சார்லஸ் டிரியூ' என்ற போர்க்கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதல் முறையாக இந்தியாவுக்கு கடந்த 7-ந் தேதி வந்துள்ளது. காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வந்தன. வழக்கமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு, சிப்பந்திகள் வசிக்கும் அமைப்புகள் மற்றும் உபகரணங்கள் மீதான பழுதுபார்ப்பு பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் கூறுகையில், ''அமெரிக்க போர்க்கப்பலுக்கு பழுதுபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கியதன் மூலம், இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு வலுவடைந்து உள்ளது. இதன் மூலம் இந்தோ-பசிபிக் திட்டத்தின் கீழ் தெற்கு ஆசியாவில் நல்லிணக்கம் மேம்படும்'' என்றார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத்தூதர் ஜூவித் ரேவின் கூறும்போது, ''காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்க போர்க்கப்பலான 'சார்லஸ் டிரியூ' பழுது பார்க்கப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல். இது இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதின் அடையாளமும் கூட'' என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் காட்டுப்பள்ளியில் புதியதாக இரண்டு கப்பல் கட்டும்தளம் எல் & டி ஷிப்பில்டிங் லிமிடெட் மூலம் கட்டப்படுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்தத் தளம் டிட்கோ மற்றும் லார்சன் & டூப்ரோ கூட்டாக இணைந்து இரண்டு கட்டங்களாக அமைக்கப்படுகிறது


Updated On: 22 March 2023 5:35 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
 2. உடுமலைப்பேட்டை
  உடுமலை; அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகள்...
 3. சினிமா
  கீர்த்தி சுரேஷ் கடகடவென 20 கிலோ எடை குறைத்தது எப்படி? இப்படித்தானாம்!
 4. திருச்செந்தூர்
  திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை...
 5. சினிமா
  எதிர்நீச்சலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்! அய்யய்யோ இவரா இவரு...
 6. தமிழ்நாடு
  வருங்கால வைப்பு நிதி அதிக ஓய்வூதியம்: விண்ணப்பிக்க காலக்கெடு...
 7. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு: மனுக்கள்...
 8. திருப்பூர்
  திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க, கலெக்டர் அறிவுறுத்தல்
 9. தமிழ்நாடு
  புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
 10. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 100 கிலோ கேக் வெட்டி கருணாநிதி பிறந்த நாள் விழா