/* */

தமிழகத்தில் 1- ம்தேதி கன மழை பெய்ய உள்ள 11 மாவட்டங்கள்

தமிழகத்தில் பிப்ரவரி 1- ம்தேதி கன மழை பெய்ய உள்ள 11 மாவட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

தமிழகத்தில் 1- ம்தேதி கன மழை பெய்ய உள்ள 11 மாவட்டங்கள்
X

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்த அளவிற்கு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு செய்யவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையின் இறுதி கட்டமான தற்போது தமிழக முழுவதும் மழை இல்லை. ஆனால் இரவில் தொடங்கி காலை வரை பனிப்பொழிவு மிக அதிகமாக உள்ளது.

பொதுவாக பனிப்பொழிவு அதிகரித்து விட்டால் மழையின் அளவு குறைந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் தற்போது மழையும் குறைந்துவிட்டது. வெயில் தலை காட்டத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது .இந்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி (புயல் சின்னம்) உள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் இன்றும் நாளையும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த புயல் சின்னம் தென்மேற்காக நகர்ந்து இலங்கை திரிகோணமலை அருகே
ஜனவரி 31 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் சின்னம் காரணமாக சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்தினாலும் மழையாவது பொய்யாதா என்று எதிர்பார்ப்பு விவசாயிகளிடமும் பொது மக்களிடமும் ஏற்பட்டு உள்ளது.

Updated On: 31 Jan 2023 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்