/* */

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! ரஹானேவும் இருக்காரு டீம்ல!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரஹானேவும் இருக்கிறார்.

HIGHLIGHTS

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! ரஹானேவும் இருக்காரு டீம்ல!
X

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரஹானேவும் இருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் டெஸ்ட் ரேங்கிங்கில் இந்த ஆண்டு முதல் இரு இடங்களைப் பிடித்த இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோத இருக்கின்றன. அந்த வகையில் இந்த தொடரில் ஆடும் ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படவுள்ள இந்த தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருந்தது.

Australia's World Test Championship Final squad: Pat Cummins (C), Scott Boland, Alex Carey, Cameron Green, Marcus Harris, Josh Hazlewood, Travis Head, Josh Inglis, Usman Khawaja, Marnus Labuschagne, Nathan Lyon, Mitchell Marsh, Todd Murphy, Matthew Renshaw, Steve Smith (VC), Mitchell Starc and David Warner

ஆஸ்திரேலியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி அணி: பாட் கம்மின்ஸ் (சி), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், மேத்யூ மர்பி, டோட் ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (விசி), மிட்செல் ஸ்டார்க் மற்றும் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்திய அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இதில் யார் கேப்டனாக இருக்கப்போகிறார் என்பது நிச்சயமாக தெரியும். அதே நேரம் அணியில் வேறு யார் யார் இருப்பார்கள் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அஜிங்யா ரஹானே அணியில் இடம்பிடித்துள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஜிங்யா ரஹானே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி நல்ல வெற்றியைப் பெற்று வருகிறது.

15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

India's World Test Championship Final squad: Rohit Sharma (Captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Ajinkya Rahane, K L Rahul, KS Bharat (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Axar Patel, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎல் ராகுல், பரத், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், உனாத்கட்

Updated On: 25 April 2023 7:21 AM GMT

Related News