/* */

World Cup Cricket India-NZ Match இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல் வெற்றிக் கனி யாருக்கு?....படிச்சு பாருங்க...

World Cup Cricket India-NZ Match இன்று மதியம் தர்மசாலாவில் நடக்க உள்ள இந்திய அணியின் 5 வது போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. யாருக்கு வெற்றி என்ற அடிப்படையில் இரு அணிகளுமே பலத்துடன் போராடும் என்பதில் ஐயமில்லை.

HIGHLIGHTS

World Cup Cricket India-NZ Match  இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்  வெற்றிக் கனி யாருக்கு?....படிச்சு பாருங்க...
X

World Cup Cricket India-NZ Match

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மதியம் இந்தியா -நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. எப்படியாவது உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணியுடன் மோதி இந்திய அணியானது இன்று தன்னுடைய 5 வது வெற்றிக்கனியைப் பறிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.

World Cup Cricket India-NZ Match


World Cup Cricket India-NZ Match

இன்று நடக்க உள்ள போட்டியில் வெற்றி பெறும் அணி பட்டியலில் முதலிடம் பெற உள்ளது. இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13 வது சீசன் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. வெஸ்ட் இன்டீஸ் அணியானது இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இமாச்சலப்பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் இன்று மதியம் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கான போட்டிகள் நடக்கிறது.

நியூசிலாந்து அணியானது பட்டியலில் கூடுதல் பாயின்ட் பெற்று முதலிடத்தில் உள்ளது. இன்று நடக்க உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பட்டியலில் முதலிடத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் இரு அணிகளுமே வெற்றியைத் தக்க வைத்துள்ளன. இதனால் இன்று நடக்க உள்ள போட்டியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கும் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் ஷீப்மன் கில் ஆகியோர் பெருத்த நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றனர். 100 ரன்கள் வரை விக்கெட் இல்லாமல் பலப்படுத்திவிட்டால் பின்னர் களமிறங்கும் விராட்கோலி மற்றும் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கோலியுடன் களமிறங்கி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். எனவே இன்று நடக்க உள்ள போட்டியில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகம் உள்ளது.

World Cup Cricket India-NZ Match


கடந்த போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங்கில் நம்பிக்கை ஏற்படுத்திய ரோகித், கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல்ராகுல், கில் ஆகியோர் இன்று பொறுப்புடன் ஆடினால் நிச்சயம் வெற்றிக்கனியைப் பறிக்கலாம். அதன் பின்னர் களமிறங்க உள்ள ஷர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் நிதானமாக விளையாடி அணிக்கு வலு சேர்க்க வேண்டும்.

இந்திய அணியின் பவுலிங்கைப் பொறுத்தவரை பும்ரா இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முகமது சிராஜ் 5 விக்கெட் எடுத்துள்ளார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்பட முகமது ஷமி இன்று ஆட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சுழற்பந்து வீச்சில் குல்தீப், ஜடேஜா தங்கள் பங்கிற்கு விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நியூசியும் போராடும்-?

2015 ,2019 ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் பைனல் வரை சென்ற நியூசிலாந்து அணியானது தோல்வியைத் தழுவியது. ஆகவே இந்த போட்டியில் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வெகு ஆக்ரோஷமாகவும் அதே நேரத்தில் பொறுப்புடனும் நியூசி அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். அந்த வகையில்தான் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியைப் பெற்று தக்கவைத்துள்ளனர். இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் இன்றைய போட்டிக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை.

நியூசி. கேப்டன் வில்லியம்ஸ் காயம் காரணமாக இன்று ஆடமாட்டார். அவர் இல்லாவிட்டாலும் இருக்கும் கான்வே, ரவீந்த்ரா, வில்யங் ஆகியோர் பேட்டிங்கில் இந்த அணிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். பந்துவீச்சில் முதலிடத்தைப் பெற்றுள்ள சான்ட்னர் வேறு மிரட்டல் விடுக்கிறார்.இவரது பந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்கப்போகிறீர்களா? இன்று இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அமையலாம். இருந்தாலும் நியூசிலாந்தும் இந்த கனவை காண்பார்கள் அல்லவா? ஆகவே பெருத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

World Cup Cricket India-NZ Match


இதுவரை நடந்த உலக்கோப்பை போட்டிகளில் இந்தியா நியூசிலாந்து அணிகள் 9 முறை மோதியுள்ளன. அதில் 3 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆக இன்று நடக்க உள்ள போட்டியில் இந்திய அணி வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்திய அணி பயிற்சியின் போது சூர்யகுமாருக்கு வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த வலிக்கு ஐஸ்பேக் ஒத்தடம் தரப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்று பான்ட்யா இடத்தில் யார் நிரப்ப போகிறார்கள் . சூர்யகுமார் வந்தால் பந்துவீச்சில் சிக்கல் ஏற்படும். இதனால் என்னசெய்யப் போகிறார் கேப்டன் ரோகித் .

இன்றைய போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி வீரர்கள் அவசரப்படாமல் பொறுமையுடன் விளையாடினால் மட்டுமே வெற்றிக்கனி பறிக்க முடியும். காரணம் எதிரணியான நியூசிலாந்து அணியானது பலத்த பலத்தோடு இருப்பதால் பல யூகங்களைக் கையாண்டுதான் இந்த வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். இது நடக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கும் என்று..... வாங்க தர்மசாலா போகலாம்... டிவி வழியாக....

Updated On: 22 Oct 2023 6:53 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்