இந்தியா அதிரடி காட்டுமா? ஆஸி-இந்தியா 2 வது டி 20 போட்டி

நாக்பூரில், இன்று இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி-20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி 2-வது 20 ஓவர் போட்டியில் இன்று களம் இறங்குகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்தியா அதிரடி காட்டுமா? ஆஸி-இந்தியா 2 வது டி 20 போட்டி
X

நாக்பூரில், இன்று இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2வது டி-20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. 

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா (71 ரன்), லோகேஷ் ராகுல் (55 ரன்), சூர்யகுமார் யாதவ் (46 ரன்) ஆகியோரின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ஆனால் பந்து வீச்சு சொதப்பியது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும் (4 ஓவரில் 52 ரன்), ஹர்ஷல் பட்டேலும் (4 ஓவரில் 49 ரன்) இறுதிகட்டத்தில் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு வித்திட்டது.


முதுகுவலி பாதிப்பில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழு உடல்தகுதியை எட்டாததால் கடந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவர் இல்லாதது பந்துவீச்சு பலவீனத்தை காட்டியது.

இதனால், பும்ரா இன்றைய ஆட்டத்தில் களம் காணுவார் என்று தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து தொடர்ந்து சொதப்புகிறார். ஆனாலும் அவருக்கு இடைவிடாது வாய்ப்பு வழங்கப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. அவருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்பது போட்டிக்கு முன்பாகத் தான் தெரியும். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆவலில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் கேமரூன் கிரீனும் (61 ரன்), மேத்யூ வேட்டும் (45 ரன்) இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளினர். அதே உத்வேகத்துடன் 2-வது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் காத்திருக்கிறார்கள்.


அதேவேளை, உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களம் காணும் இந்திய அணி பதிலடி கொடுக்க வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. நாக்பூர் ஆடுகளம், மொகாலியுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானது. இது மெதுவான தன்மை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பந்து வீச்சாளர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.

இந்த மைதானத்தில் இதுவரை 12 இருபது ஓவர்போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 4 ஆட்டங்களில் ஆடி அவற்றில் 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல் அல்லது அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் அல்லது பும்ரா அல்லது தீபக் சாஹர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் ஒயிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா.

இன்றைய போட்டி, இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது. முன்னதாக 'டாஸ்' மூலம், பேட்டிங், பவுலிங் செய்யும் அணிகள் தீர்மானிக்கப்படுகிறது.

இன்றைய போட்டியை தொடர்ந்து, வரும் 25ம் தேதி 3வது டி20 போட்டி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.

Updated On: 2022-09-24T10:16:57+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Navagraha temples in Tamil Nadu தமிழகத்தில் நவக்கிரக தலங்கள் எங்கே...
 2. தென்காசி
  வீடு கட்டும் திட்டத்தை எளிமை படுத்த வலியுறுத்தி தொழிலாளர்கள்...
 3. வணிகம்
  மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் யூலிப்கள்: எது சிறந்தது?
 4. உலகம்
  ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் ரஷ்ய விண்வெளி வீரரை அழைத்துச் செல்கிறது
 5. தமிழ்நாடு
  கனிமொழிக்கு மத்திய நிலைக்குழு தலைவர் பதவி கொடுத்ததன் பின்னணி
 6. திருப்பத்தூர், சிவகங்கை
  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்: அமைச்சர்...
 7. ஆன்மீகம்
  arupadai veedu murugan temple list in tamil-முருகனின் அறுபடை வீடுகளை...
 8. புதுக்கோட்டை
  பிஎம்கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள் ஆதாருடன் தொலைபேசி எண்ணை...
 9. சினிமா
  கதை, திரைக்கதை, வசனம் எழுதும் யோகிபாபு
 10. இந்தியா
  தன்வினை தன்னை சுடும்: தீ வைத்த மக்களை திருப்பி தாக்கிய ராவணன்