/* */

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி சூப்பர்-12:இந்தியா- பாக். இன்று மோதல்

t20 world cup super 12 round india vs pakistan டி20 உலககோப்பை தொடர் சூப்பர் -12 போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேரடியாக சந்திப்பதால் பெருத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

HIGHLIGHTS

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி  சூப்பர்-12:இந்தியா- பாக். இன்று  மோதல்
X

இந்திய கேப்டன் ரோகித்சர்மா- பாக். அணி கேப்டன் பாபர் ஆசம்

t20 world cup super 12 round india vs pakistan


இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (பைல்படம்)

t20 world cup super 12 round india vs pakistan

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பையானது நடக்கிறது. இன்றைய சூப்பர் 12 போட்டியில் பரம வைரிகளான இந்தியா- பாக். அணிகள் மோதுவதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியானது 'பி'பிரிவில் இடம் பெற்றுள்ளது. மெல்போர்னில் நடக்க உள்ள இன்றைய போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. ஆனால் கேப்டன் தோனி இருக்கும்போது ஐசிசி நடத்தும் தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதும்போது இந்திய அணிதான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் கடந்த ஆண்டில் 2021ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியானது டி 20 உலககோப்பை தொடரில் விராட்கோலி தலைமையில் தோல்வியைத்தழுவியது.

பதிலடி தருமா?

இன்று நடக்க உள்ள போட்டியில் கேப்டன் ரோஹித்சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கடந்தஆண்டு பெற்ற தோல்விக்கு இந்திய அணியானது பதிலடி நிச்சயம் தரும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

அதிரடி துவக்கமா?

இந்திய அணியைப் பொறுத்தவரை அனைவருமே இளைஞர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த போட்டிகளில் இந்தியஅணிதான் வெற்றி பெற்றுள்ளது. இதில் பல போட்டிகளில்முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதும் அறிந்ததே. கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்ன் கே.எல்.ராகுல், விராத்கோலி ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் அதிரடி காட்டினால் இந்திய உச்ச பட்ச ஸ்கோரைப் பெறமுடியும்.

t20 world cup super 12 round india vs pakistan

அதிரடி சூர்ய குமார்

நான்காவதாக களம் இறங்கும் சூர்யகுமார் இந்திய அணியின் அதிரடி வீரர். அவருக்கு எந்தமைதானமாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. பவுலிங் வீசுவோரைப்பொறுத்தது. எத்தகைய பந்தையும் விளாசும் ஆற்றல் மனவலிமை பொருந்தியவர் சூர்யகுமார் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்றும் இவர் அதிரடி காட்டும் பட்சத்தில் பாகிஸ்தான் பவுலர்கள் திணறிப்போக வாய்ப்புண்டு. தீபாவளி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று சரவெடியாக வெடிப்பார்களா? என அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இந்தியா அதிரடி காட்டினால்தான் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என நம்புகின்றனர்.

ஹர்திக்- தினேஷ் கார்த்திக்

இந்திய அணியானது பல போட்டிகளில் முன்னனி வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிய போது கைகொடுத்தவர்கள் இனியும் கைகொடுக்கப்போவது யார் தெரியுமா? ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும். இருவருமே பொறுமையுடன் ஆட்டத்தின் போக்கைக் கருதி விளையாடி அணிக்கு பலம் சேர்ப்பதில் கில்லாடியானவர்களாக திகழ்வதால் இன்றைய ஆட்டத்திலும் இவர்களுடைய ஒத்துழைப்பு தேவையா? அல்லது முன்னணி வீரர்களே அதிரடி காட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய பவுலர்களைப் பொறுத்தவரை புவனேஷ்குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க உள்ளது இந்திய அணி.ஷமி களத்தில் இறங்குவாரா? என்பது சந்தேகமாக உள்ளது. பாகிஸ்தான் அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் இடம்பெறுவதால் அஷ்வின் அல்லது அக்சர் பட்டேல் சேர்க்கப்பட வாய்ப்புண்டு.

t20 world cup super 12 round india vs pakistan

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கும் வீரர்களான கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர். இவர்களின் விக்கெட்டுகளை இந்திய அணி எளிதில் சாய்த்தால் பலம் நமக்கே என்பதில் இந்திய அணி திட்டமிட்டு பந்து வீச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்கள் இருவரையும் தொடர்ந்து ஆட விட்டால் 120 பந்துகளில் பாதிவரை இவர்களே விளாசுவதால் உச்சபட்ச ஸ்கோரை பாக். அணி எளிதில் பெற்றுவிடும்?

இதுமட்டும் அல்லாமல் இதற்கு பிறகு களமிறங்கபோகும் பாக்-வீரர்களான முகமது நவாஸ்,.இப்திகார் அகமதுவும், பகர்ஜமான் ஆகியோரும் பேட்டிங்கைப் பொறுத்தவரை பலமாக உள்ளனர்.கடந்த 2021 டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய டாப் மூன்று வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்த ஷகீன் அப்ரிதி காயம் காரணமாக ஓய்வில் இருந்துவிட்டு அணிக்கு திரும்பியுள்ளதால் இவரின் பந்து வீச்சு இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

இவர் மட்டும் அல்லாமல் பாக். பவுலர்களான முகமது வாசிம்,ஹாரிஸ்ராப், இளம்புயல் நஷிம் ஷா ஆகியோரும் இந்திய அணியை மிரட்ட தயாராக உள்ளனர். இதுமட்டும் அல்லாமல் சுழற்பந்துவீச்சாளர் ஷதாப் கான் வேறு உள்ளார்.

37 ஆண்டுகளுக்கு பின் மோதல்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் 37 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் எதிர்கொள்கின்றன.இதற்கு முன்னதாக 1988 ம் ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணிதான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆக இன்று நடக்கும் போட்டியிலும் இந்த வெற்றி தொடர்ந்தால் அது 37 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி விளையாடி வெற்றி பெற்றது சாதனையாகவே கருதப்படும் அதுவும் பாகிஸ்தானோடு.

மிரட்டுமா மழை?

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியானது முதன் முதலாக பாகிஸ்தான்அணியை எதிர்கொள்ளும்போட்டியானது இந்திய நேரப்படி நண்பகல் 1.30மணியளவில் துவங்க உள்ளது. மழை வர வாய்ப்பிருந்தாலும் போட்டி ரத்தாவதற்கு வாய்ப்பில்லை எனவும், ஓவர்கள் வேண்டுமானால் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிக்கப்போவது யாரு-?

இந்திய கேப்டன் ரோகித்சர்மா தலைமையில் களம் இறங்கப்போகும் இந்திய அணியானது சற்று புத்துணர்ச்சியோடுதான் உள்ளது. காரணம் இப்போட்டிகளுக்குமுன்பாக நடந்த தொடரை இந்திய அணி வென்றுள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையுடன் விளையாடி அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசான வெற்றி என்பதை தருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்...

Updated On: 23 Oct 2022 5:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...