/* */

ஐசிசி உலக கோப்பை டி20: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

HIGHLIGHTS

ஐசிசி உலக கோப்பை டி20: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
X

இந்த முறை டி20 உலக கோப்பையை பிசிசிஐ நடத்துகிறது. இந்தியாவில் நடைபெற வேண்டிய இத்தொடர் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடைபெற உள்ளது (அக்.17 - நவ.14). போட்டி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் எந்த பிரிவில் எந்த அணி என்ற விவரங்களை ஐசிசி நேற்று வெளியிட்டது.

அதன்படி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்த தொடரின் 'சூப்பர் 12' சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்த 8 அணிகள் தவிர எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்று போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.

அதில் தரவரிசையில் 9க்கு கீழ் உள்ள 8 நாடுகள் 2 பிரிவுகளாக பங்கேற்கின்றன. ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பபூவா நியூ கினியா, ஓமன் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 12 சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக விளையாட உள்ளன. முதல் பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியும், பி பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணியும் இடம் பெறும்.

சூப்பர் 12 இரண்டாவது பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணியும், பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியும் பங்கேற்கும். கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 July 2021 3:24 AM GMT

Related News