/* */

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா…

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெற்றி, தோல்வி இன்றி முடிவடைந்ததால் 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

HIGHLIGHTS

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா…
X

தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.

இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 18 ஆம் தேதி வெலிங்டனில் நடைபெறுவதாக இருந்தது. ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் மோசமான வானிலை காரணமாக அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது 20 ஓவர் போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது.

அந்தப் போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி, 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியர் நகரில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு டீம் சௌதி தலைமை வகித்தார். டாஸ் வென்ற டீம் சௌதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

போட்டித் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே பின் ஆலனின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். மார்க் சாப்மேன் உள்ளே வந்ததும் அடித்து ஆடத் தொடங்கினார். இருப்பினும், அவரது ஆட்டத்தை 12 ரன்களில் முகமது சிராஜ் முடித்து வைத்தார்.

டெவோன் கான்வே மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதங்கள் அடித்தனர். கான்வே 59 ரன்களிலும், பிலிஸ்ஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் நியூஸிலாந்து அணி 19.4 ஓவரில் 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் 7 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது.

இசான் கிஸன் 10 ரன்களிலும், ரிஷப் பந்த் 11 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை மேலும் தொடர முடியாத நிலை நீடித்தது. டக்ஸ்வோர்த் லிவீஸ் விதிகயின் படி 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி 75 ரன்கள் எடுத்திருந்ததால் போட்டி வெற்றி, தோல்வியின்றி டையில் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஏற்கெனவே இந்திய அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்ததால் தொடரை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய- நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டித் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2022 4:35 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!