/* */

மும்பையின் போராட்டம் வீண்: ஐதராபாத் த்ரில் வெற்றி

ஐபிஎல் 2022 தொடரில் 65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

HIGHLIGHTS

மும்பையின் போராட்டம் வீண்: ஐதராபாத் த்ரில் வெற்றி
X

ஐபிஎல் 2022 தொடரில் 65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை ெதாடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - பிரியம் கார்க் களமிறங்கினர். இதில் 9 ரன்கள் அடித்து அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, பிரியம் கார்குடன் இணைந்து அதிரடியாக ஆடத்தொடங்கினார். இந்த கூட்டணியால் அணியின் ஸ்ேகார் உயர, அதிரடியாக ஆடிவந்த பிரியம் கார்க், 42 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அவருக்கு பின்னால் அதிரடியாக ஆடிவந்த ராகுல் திரிபாதி 71 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரான் 32 ரன்கள் எடுத்து வெளியேற, ஐடென் மார்க்கம் 2 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்கள் அடித்து வெளியேறினார்கள். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி துவக்க வீரர்கள், ஐதராபாத் அணி பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். அபாரமாக விளையாடி ரோகித் ஷர்மா 48 ரன்னில் வெளியறே, மறுமுனையில் இருந்த இஷான் கிஷான் 43 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சாம்ஸ் 15 ரன்னில் வெளியேற, திலக் வர்மாக 8 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் டிம் டேடிவிட் அதிரடி சரவெடி ரன்கள் அடித்தார். 18 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த சஞ்சய் யாதல் டக் அவுட் ஆக, கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டது. இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது.

Updated On: 18 May 2022 3:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  4. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  5. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  7. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  9. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  10. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய