/* */

டிராவிட்டுக்கு பிறகு தோனி! பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம்?

சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரசிகர்கள் இதனை வேண்டுகோளாக கோரி வருகின்றனர்.

HIGHLIGHTS

டிராவிட்டுக்கு பிறகு தோனி! பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம்?
X

இந்திய பயிற்சியாளராக டிராவிட்டின் பதவிகாலம் முடிவடையவுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் மற்றும் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரசிகர்கள் இதனை வேண்டுகோளாக கோரி வருகின்றனர்.

இந்தியாவில் இந்த ஆண்டு உலக கோப்பை நடைபெற இருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பை தொடருடன் இப்போதைய தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக் காலம் முடிவடைய இருக்கிறது. இதனையடுத்து அந்த பதவிக்கு மகேந்திர சிங் தோனியை நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இருப்பது போல இந்திய அணியிலும் பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என தனித்தனி பயிற்சியாளர்களை நியமித்தால், எப்படி இருக்கும்? ரசிகர்கள் இப்படித்தான் யோசித்து வருகிறார்கள்.

பேட்டிங்கிற்கு ஒரு நபர், பவுலிங் யூனிட்டுக்கு ஒரு நபர், ஃபீல்டிங்கிற்கு ஒரு நபர் என ஜாம்பவான்களை நியமிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

தலைமை பயிற்சியாளர் எம் எஸ் தோனி

மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் இந்த பொறுப்புக்கு தகுதியானவர் என்கிறார்கள் ரசிகர்கள். தோனியின் ஆட்ட நுணுக்கங்களும், பாணியும் வீரர்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும். கேப்டன்ஷிப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தையும் தோனிக்கு வழங்கவேண்டும் எனவும் மீண்டும் விராட் கோலியை கேப்டனாக்கிட வேண்டும் எனவும் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

பேட்டிங்கிற்கு சச்சின்

சச்சின் டெண்டுல்கரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்கிறார்கள். அவரின் அணுகுமுறை மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருக்கும். அதிலும் வெளிநாடுகளில் ஆடும் ஆட்டங்களின்போது வீரர்களுக்கு மிகப் பெரிய அளவில் சச்சின் அறிவுரைகள் உறுதுணையாக இருக்கும். அவரின் அனுபவம் மிகப் பெரிய அளவில் இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ஜாகீர்கானிடம் பந்து வீச்சு

இந்திய முன்னாள் வீரரும் பந்துவீச்சு ஜாம்பவானுமான ஜாகீர்கான் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பையின்போது ஜாகீர்கானின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பந்து வீச்சு ஆலோசகராக மட்டும் இல்லாமல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய இளம் பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

ஃபீல்டிங் பயிற்சியாளர் யுவராஜ் சிங்

இளைஞராக தோனிக்கு முன்னதாகவே இந்திய அணியில் இடம்பிடித்த யுவராஜ் சிங், மிகப் பெரிய புரட்சியையே உண்டு செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் யுவராஜ் சிங்கிற்கு முன் யுவராஜ் சிங்கிற்கு பின் என்று குறிப்பிடும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. அவரை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமித்தால் இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் இன்னும் வேற லெவலுக்கு முன்னேறும்.

Updated On: 28 Jun 2023 6:14 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை