/* */

இந்தியா- வெ.இ. 4 வது டி 20 போட்டி கோப்பையை வென்றது இந்தியா இன்று ஜெயிக்கப்போவது யாரு?

இந்தியா -வெ,இ அணிகளுக்கிடையேயான 5 டி20 போட்டியில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.இன்று 5 வது போட்டி இரவு 8மணிக்குநடக்கிறது.

HIGHLIGHTS

இந்தியா- வெ.இ. 4 வது  டி 20 போட்டி   கோப்பையை வென்றது இந்தியா   இன்று ஜெயிக்கப்போவது யாரு?
X

அமெரிக்க ஃப்ளோரிடாவில் நடந்த 4 வது டி20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது.

ஃப்ளோரிடா-

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நேற்றுநடந்த இந்தியா- வெ.இ அணிகளுக்கிடையேயான 4 வது டி-20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா டாஸ் வென்றதால் இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்தது. ஓபனர்களாக கேப்டன்ரோகித்தும், சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர். இருவரும் அவுட்டாகாமல் ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடுவார்கள் என எண்ணியிருந்த வேளையில் ரோகித்சர்மா 16 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளை சந்தித்து 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த தீபக்ஹோடா 21 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். 108 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் சாம்சன் ஜோடி சிறிது நேரம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

ரிஷப் பண்ட் பொறுமையாக விளையாடி 31 பந்துகளில் 44 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். சாம்சன் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணியானது 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

192 ரன்கள்இலக்கு

இரண்டாவது பேட்டிங் செய்ய வந்த வெ.இ அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள தயங்கினர். வெ.இ அணியின்துவக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங்(13),கெயில் மேயர்ஸ்(14)என அடுத்தடுத்து நடையைக்கட்டினர். அதன் பின்னர் களமிறங்கிய தாமஸ் சிக்ஸர் அடிக்க எண்ணி கேட்ச் கொடுத்து ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். வெ.இ அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் சற்று நிதானமாக ஆடி 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் ரோவ்மென் பவல் 24 ரன்கள் எடுத்த நிலையில் ரன் எடுக்க அணி திணறியது. அதன் பின்னர் வந்தவர்கள் வரிசையாக விழ அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெ.இ அணி 19.1 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம்இந்திய அணியானது 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

இந்திய அணியின் பாஸ்ட் பவுலரான ஆவேஷ் சிறப்பாக 4 ஓவர்களை மட்டுமே வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது.

கோப்பையை வென்ற இந்தியா

இரண்டு அணிகளுக்கும் இடையே 5 டி20 போட்டிகள் நடத்த திட்டமிட்டதில் 4 போட்டிகள் இ துவரை முடிந்துள்ளது. இ தில் இந்திய அணியானது 3 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.இதன் மூலம் ரோகித்சர்மா தலைமையில் டி20போட்டிகளில் பெற்ற 8வது வெற்றியாகும். இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ள 5 வது போட்டியில் ஜெயிக்க போவது யாரு? பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On: 8 Aug 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...