/* */

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் 5 வது டி 20 போட்டி 100 ரன்களில் சுருட்டிய ஸ்பின் பவுலர்கள் இந்தியா அபார வெற்றி

இந்தியா-வெ.இ அணிகளுக்கிடையேயான 5 டி20போட்டியில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்று அபார சாதனை படைத்துள்ளது. இந்திய ஸ்பின் பவுலர்களால் வெ.இ. அணி 100 ரன்களில் சுருண்டது.

HIGHLIGHTS

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் 5 வது டி 20 போட்டி  100 ரன்களில் சுருட்டிய ஸ்பின் பவுலர்கள்  இந்தியா அபார வெற்றி
X

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டி20 போட்டியில்  4 போட்டிகளில்வென்று கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள்.

ப்ளோரிடா;

இந்தியா.வெ.இ அணிகளுக்கிடையே நடந்த 5 டி20 போட்டிகளில் இந்திய அணியானது 4 போட்டிகளில் வென்று அபார சாதனை படைத்துள்ளது. 4 போட்டிகள் முடிந்த நிலையிலேயே 3 போட்டிகளில் வென்று கோப்பையை வென்றது இந்திய அணி.

இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மைதானத்தில் நடந்த 5 வது போட்டியில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களால் 100 ரன்களை மட்டுமே எடுத்து இலக்கை எட்டமுடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத்தழுவியது-

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா ஓய்வு எடுத்துக்கொண்டதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணியில் இளம் வீரர்கள் மட்டுமே களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிறயது இஷான் கிஷன்-ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி.இஷான் கிஷன் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று நடந்த போட்டியில் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 40 பந்துகளை எதிர்கெண்டு 64 ரன்களை எடுத்ததில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹீடா 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார். இவர் 3 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களையும் அடித்தார்.

சஞ்சு சாம்சன் அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 2 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களை ஹர்திக் விளாசினார். அதன் பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். 20 வது ஓவரில் இந்தியஅணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

189 ரன்கள் இலக்கு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்கமே அதிர்ச்சியை தந்தது. ஏனெனில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன்ஹோல்டர் டக் அவுட்டில் வெளியேறினார். புரூக்ஸ் 13 ரன்கள் எடுத்தநிலையில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் பூரன் 3 ரன்களிலும், டிவோன் தாமஸ் 10 ரன்களிலும், ரோமன் பவல் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. 5 பேர் டக் அவுட்டான நிலையில் சிம்ரன் ஹெட்மயர் மட்டுமே சோலோவாக நின்று ஆஃப் செஞ்சுரியை கடந்தார்.

மற்ற வீரர்கள் அனைவருமே இந்திய ஸ்பின் பவுலர்களின் வேகத்தில்அடுத்தடுத்து சுருண்டனர். 15.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 4 க்கு 1 என்று தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணியில் பிஸ்னாய் 4 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தனர்

Updated On: 8 Aug 2022 6:09 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...