இந்தியா-வெ.இ. 4 வது டி 20 போட்டி தொடரை வெல்லுமா இந்தியா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

To Day T20 Match - இந்தியா- வெ.இ. அணிகளுக்கிடையே இன்று 4 வது டி20 போட்டியானது அமெரிக்க மண்ணில் நடக்கிறது. இன்று நடக்கும் போட்டி த்ரில்லிங் ஆக இருக்கும் என்பதால் யார் தொடரை வெல்வார்? என எதிர்பார்ப்பில்ரசிகர்கள் உள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்தியா-வெ.இ. 4 வது டி 20 போட்டி தொடரை வெல்லுமா இந்தியா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
X

இந்திய கேப்டன் ரோகித்சர்மா  மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன்

To Day T20 Match - அமெரிக்கா:

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 5 டி20 போட்டி நடத்த திட்டமிட்டு அதில் 3 போட்டிகள் முடிவடைந்துவிட்டது. இந்த 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் ஒருபோட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடக்கும் 4 வது போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மைதானம்

இன்று இரவு 8மணிக்கு நடக்க உள்ள 4வது போட்டியானது அமெரிக்க மண்ணில் நடக்கிறது. அமெரிக்காவைப்பொறுத்தவரை கிரிக்கெட்டிற்கு அதிக ரசிகர்கள் இல்லை என்றாலும் கடந்த 12 ஆண்டுகளுக்குமுன்பாக நியூசிலாந்துடன் இலங்கை அணி முதன் முதலாக மோதியது. கடந்த 12 ஆண்டுகளில் முன்னணி அணிகள் இதுவரை 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஆசியாவைச்சேர்ந்த மக்கள் கிரிக்கெட்டினை பார்க்கின்றனர். ஆனால் இன்னும் அமெரிக்க மக்கள் கிரிக்கெட் பக்கம் வராததும் அவர்களை கிரிக்கெட் பக்கம் இழுக்க தகுந்த ஏற்பாடுகள் எல்லாம் கடந்த காலத்தில் நடந்தது நினைவிருக்கலாம்.

முன்னாள்இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வார்னே ஆகியோர் சேர்ந்த டி20போட்டியில் விளையாடியதில்இருந்து அமெரிக்காவில் தற்போது தொடர்ந்த டி20 போட்டிகள் நடந்த வண்ணம் உள்ளன. அவ்வப்போது அமெரிக்காவிலும் கிரிக்கெட் மேட்ச்களை நடத்தினால்தான் அங்குள்ளவர்களுக்கும் இதில் விருப்பம் வரும். ஆகவே இந்திய அணி அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டினை வளர்க்க அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும்.

கடந்த 2016 ம்ஆண்டு இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இதே மைதானத்தில் விளையாடி ஒரே மேட்சில் 480 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளது.

ஆனால் இன்று நடக்க உள்ள மைதானத்தில் பிட்ச் நிலவரம் என்ன? இதேபோல் இரு அணிகளும் நன்கு விளையாடுவார்களா? என்பதெல்லாம் களத்தில் விளையாடும்போதுதான் தெரியவரும். எனவே இன்று நடக்கும் போட்டியானது த்ரில்லிங்காகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் அதிகமான இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டிநடக்காததால் அங்குள்ள பிட்க் கன்டிஷனைப் பற்றி எடைபோடுவதும் சற்று கடினமே. இருந்தபோதிலும் கிரவுண்ட் சிறியதாக இருப்பதால் பேட்ஸ்மேன்களின் பெரிய ஷாட் என்ன ஆகும்-

ரோகித் சாதனை படைப்பாரா?

இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா இன்று நடக்கும் போட்டியிலும் விளையாடுகிறார். இன்று இந்திய அணியானது தொடரை வெல்லும் பட்சத்தில் ரோகித் தலைமையில் வெல்லும் 8 வது தொடராக இன்றைய போட்டி இருக்கும். இது ஒரு சாதனையாகும்.மேலும் டி20 போட்டியில் இதுவரை 29 போட்டியில் வென்றவர் என்ற சாதனையை பெறுவார்.

மகேந்திர சிங் தோனி இதுவரை 41 போட்டிகளில் முதல் இடத்தினை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அதேபோல் விராட் கோலி 30 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போது இந்திய அணி தொடர்ந்து டி20 போட்டிகளில் விளைாயாடி வருவதால் ரோகித்சர்மா இரண்டுபேரின் சாதனையையும் முறியடிப்பாரா? என்ற எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-08-08T11:25:35+05:30

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம்: அமைச்சர்...
 2. குமாரபாளையம்
  அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா
 3. கடையநல்லூர்
  சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்
 4. இந்தியா
  சுதந்திர தினம் 2022 இந்தியா புதிய திசையில் செல்லும் வரலாற்று நாள்:...
 5. இந்தியா
  செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்
 6. காஞ்சிபுரம்
  தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விரைவில் அரிசி அரவை ஆலைகள்: அமைச்சர்...
 7. நாமக்கல்
  ஆன்லைன் மூலம் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ. 2.46 லட்சம் மோசடி
 8. ஈரோடு
  ஈரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 2 பேர் கைது
 9. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 10. காஞ்சிபுரம்
  75 வந்து சுதந்திர தினம் : தூய கைத்தறி பட்டு மூலம் நெசவு செய்யப்பட்ட...