/* */

India Vs Australia முதல் ஒருநாள் போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? களநிலவரம்!

இந்திய கிரிக்கெட் அணி இன்றைய தினம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத இருக்கிறது. முதல் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

India Vs Australia முதல் ஒருநாள் போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? களநிலவரம்!
X

முதல் ஒரு நாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக இந்த ஆட்டத்தில் அணியை ஹர்டிக் பாண்ட்யா வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை சாய்த்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

இன்றைய தினம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத இருக்கிறது. முதல் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது.

துவக்க ஆட்டக் காரர்கள்

இன்றைய ஆட்டத்தில் ரோஹித் இல்லாததால் ஷுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குகிறார்கள். இவர்களுக்கு இருக்கும் ஒரு சிறப்பு என்னவென்றால் இருவருமே ஒருநாள் போட்டிகளில் இமாலய சாதனை படைத்தவர்கள். இருவரும் 200 ரன்களுக்கு மேல் ஒருமுறை எடுத்திருக்கிறார்கள்.

இஷான் கிஷான் கடந்த ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் கடந்த ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 208 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆட்டம் துவங்கும் நேரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் இன்று துவங்குகிறது. இன்றைய தினம் நடைபெறும் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி சரியாக மதியம் 1.30 மணி அளவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி 5 ஆட்டங்கள்

இதுவரை இந்திய அணி விளையாடிய ஒருநாள் போட்டிகளில் பல ஆட்டங்களில் வெற்றியையும் சில ஆட்டங்களில் தோல்வியையும் தழுவியிருக்கிறது. ஆனால் கடைசியாக விளையாண்ட 5 ஆட்டங்களில் வெற்றியை மட்டுமே ருசித்திருக்கிறது என்பது கூடுதல் பலமாக பார்க்கப்பட்டாலும், ஆஸ்திரேலிய அணியும் தாங்கள் விளையாண்ட கடைசி 5 ஆட்டங்களிலும் வெற்றியையே ருசித்தது.

இந்திய அணி வீரர்கள்

India (probable): 1 Shubman Gill, 2 Ishan Kishan, 3 Virat Kohli, 4 Suryakumar Yadav/Rajat Patidar, 5 KL Rahul (wk), 6 Hardik Pandya (capt), 7 Ravindra Jadeja, 8 Axar Patel/Washington Sundar, 9 Shardul Thakur/Kuldeep Yadav, 10 Mohammed Siraj, 11 Mohammed Shami/Umran Malik

இந்தியா (உத்தேச அணி): 1 சுப்மான் கில், 2 இஷான் கிஷன், 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ்/ரஜத் படிதார், 5 KL ராகுல் (WK), 6 ஹர்திக் பாண்டியா (கேப்டன்), 7 ரவீந்திர ஜடேஜா, 8 அக்சர் படேல்/வாஷிங்டன் சுந்தர், 9 ஷர்துல் தாக்கூர்/குல்தீப் யாதவ், 10 முகமது சிராஜ், 11 முகமது ஷமி/உம்ரான் மாலிக்

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

Australia (probable): 1 David Warner, 2 Travis Head, 3 Steven Smith (capt), 4 Marnus Labuschagne, 5 Mitchell Marsh/Marcus Stoinis, 6 Glenn Maxwell, 7 Alex Carey (wk), 8 Cameron Green, 9 Mitchell Starc, 10 Adam Zampa, 11 Nathan Ellis

ஆஸ்திரேலியா (உத்தேச அணி) : 1 டேவிட் வார்னர், 2 டிராவிஸ் ஹெட், 3 ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), 4 மார்னஸ் லாபுசாக்னே, 5 மிட்செல் மார்ஷ்/மார்கஸ் ஸ்டோனிஸ், 6 கிளென் மேக்ஸ்வெல், 7 அலெக்ஸ் கேரி (வாரம்), 8 கேமரூன் கிரீன், 9 மிட்செல் ஸ்டார்க், 10 ஆடம் ஜம்பா, 11 நாதன் எல்லிஸ்

Updated On: 17 March 2023 3:43 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்