சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி! இன்று டிக்கெட் விற்பனை...!

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், இன்று நேரடியாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திலேயே டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி! இன்று டிக்கெட் விற்பனை...!
X

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், இன்று நேரடியாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திலேயே டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக ஆன்லைனில் டிக்கெட் வாங்க போட்டா போட்டி போட்டு அனைத்து டிக்கெட்டுகளையும் காலியாக்கி விட்டனர் கிரிக்கெட் ரசிகர்கள். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது தெரியவந்ததும் டிக்கெட் விற்பனை நாளை குறித்து எதிர்நோக்கி இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், ஆன்லைனில் டிக்கெட் விற்பனைத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டதும் போட்டி போட்டி பலரும் டிக்கெட் வாங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளும் ஒருநாள் தொடரில் 3 போட்டிகளும் இருக்கின்றன.

டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளை வென்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்வதாக கூறியது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை துவங்கியது. அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அந்த அணி 36 வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் எளிதாக வெற்றியை ருசித்தனர். இதனால் இந்திய அணி இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரின் 3வது போட்டி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை முதலில் ஆன்லைனிலும் பின்னர் நேரிலும் விற்கப்படுவது அறிவிக்கப்பட்டது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை துவங்கிய சில மணி நேரத்தில் 1500 ரூ, 3000 ரூ டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனைத் தொடர்ந்து 5000 ரூ, 6000 ரூ, 8000 ரூ, 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட்டுகள் என ஒவ்வொன்றாக விற்று தீரவே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு நல்வாய்ப்பாக நேரடியாக சென்று வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கால் கிடக்க காத்துக்கிடக்க வருத்தப்படாதவர்களுக்கு இந்த டிக்கெட் விற்பனை நல்லவிசயமாக இருக்கும்.

இன்று 18ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் குறைந்த விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1200 ரூ என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Updated On: 2023-03-19T10:50:04+05:30

Related News