/* */

India Vs Australia தொடரை வெல்லுமா இந்திய அணி? பவுலிங் தேர்வு செய்த ஆஸி. கேப்டன்!

ரோஹித் தலைமையில் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றுமா என்பதை பார்க்கலாம்.

HIGHLIGHTS

India Vs Australia தொடரை வெல்லுமா இந்திய அணி? பவுலிங் தேர்வு செய்த ஆஸி. கேப்டன்!
X

முதல் ஒரு நாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், இந்த ஆட்டத்தில் மீண்டும் பங்கேற்கிறார் ரோஹித். அவரது தலைமையில் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றுமா என்பதை பார்க்கலாம்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை சாய்த்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

கடந்த 17ம் தேதி மும்பையில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்வதாக கூறியது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை துவங்கியது. அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அந்த அணி 36 வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் எளிதாக வெற்றியை ருசித்தனர். இதனால் இந்திய அணி இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஆட்டம் துவங்கும் நேரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய தினம் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி சரியாக மதியம் 1.30 மணி அளவில் துவங்கும்.

கடைசி 5 ஆட்டங்கள்

இதுவரை இந்திய அணி விளையாடிய ஒருநாள் போட்டிகளில் பல ஆட்டங்களில் வெற்றியையும் சில ஆட்டங்களில் தோல்வியையும் தழுவியிருக்கிறது. ஆனால் கடைசியாக விளையாண்ட 5 ஆட்டங்களில் வெற்றியை மட்டுமே ருசித்திருக்கிறது என்பது கூடுதல் பலமாக பார்க்கப்பட்டாலும், ஆஸ்திரேலிய அணியும் தாங்கள் விளையாண்ட கடைசி 5 ஆட்டங்களிலும் 4 வெற்றி மற்றும் 1 தோல்வியை பெற்றுள்ளது.

டாஸ் வெற்றி

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

துவக்க ஆட்டக் காரர்கள்

கடந்த ஆட்டத்தில் ரோஹித் இல்லாததால் ஷுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியிருந்தார். இவர்களுக்கு இருக்கும் ஒரு சிறப்பு என்னவென்றால் இருவருமே ஒருநாள் போட்டிகளில் இமாலய சாதனை படைத்தவர்கள். இருவரும் 200 ரன்களுக்கு மேல் ஒருமுறை எடுத்திருக்கிறார்கள்.

இஷான் கிஷான் கடந்த ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் கடந்த ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 208 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஆட்டத்தில் மீண்டும் ரோஹித் சர்மா வந்துவிட்டதால் சுப்மன் கில்லுடன் அவரே ஓபனிங் களமிறங்குகிறார்.

இந்திய அணி வீரர்கள்

India (Playing XI): Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, KL Rahul(w), Hardik Pandya, Ravindra Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Mohammed Siraj, Mohammed Shami

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

Australia (Playing XI): Travis Head, Mitchell Marsh, Steven Smith(c), Marnus Labuschagne, Alex Carey(w), Cameron Green, Marcus Stoinis, Sean Abbott, Nathan Ellis, Mitchell Starc, Adam Zampa

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(கேட்ச்), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி(வ), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா

Updated On: 19 March 2023 8:04 AM GMT

Related News