/* */

வரலாற்றிலேயே அதிக தங்கம், வெள்ளி, வெண்கலம்..! சாதனை படைத்த இந்தியா! இதோ பாருங்க பட்டியலை....!

இதுவரை நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலேயே அதிக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா

HIGHLIGHTS

வரலாற்றிலேயே அதிக தங்கம், வெள்ளி, வெண்கலம்..! சாதனை படைத்த இந்தியா! இதோ பாருங்க பட்டியலை....!
X

இந்திய விளையாட்டு வீரர்கள் இதுவரை பெற்ற பதக்கங்களிலேயே அதிக அளவிலான பதக்கங்கள் பெற்றது இந்த ஆண்டுதான். தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்திலும் அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. இது வரலாற்றிலேயே முதல் முறை என்பதால் மிகப்பெரிய மகிழ்ச்சியை நாட்டு மக்களுக்கு அளித்திருக்கிறார்கள் இந்திய விளையாட்டு சிங்கங்கள்.

ஒட்டுமொத்தமாகவும் இதுவரை இல்லாத அளவுக்கு 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. இதுவரை அதிகபட்சமாக கடந்த 2018ம் ஆண்டு பெற்ற 70 பதக்கங்களே இருந்தன.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பித்த போது 1951ம் ஆண்டு முதல் போட்டித் தொடரில் 15 தங்கங்களுடன் 2ம் இடம் பிடித்திருந்தது இந்தியா. அதன்பிறகு கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 16 தங்கங்களை வென்றதே அதிகபட்சமாகும். இந்நிலையில் இம்முறை அந்த சாதனையை முறியடித்து 25 தங்க பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் நீடித்து வருகிறது இந்திய அணி.

ஒட்டுமொத்தமாக இந்திய அணி 100 பதக்கங்களைப் பெற்றுள்ளது. அதில் 25 தங்கப் பதக்கங்களும், 35 வெள்ளிப் பதக்கங்களும், 40 வெண்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளது இந்தியா. முதலிடத்தில் சீனா, இரண்டாவது இடத்தில் ஜப்பான், மூன்றாவது இடத்தில் கொரியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

2010 க்கு பிறகு!

இந்த ஆண்டு நிலவரம்...!

20232535401004 th

Updated On: 7 Oct 2023 5:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!