/* */

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை துவக்கம்: ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை மும்பையில் துவங்குகிறது.

HIGHLIGHTS

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை துவக்கம்: ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்
X

பைல் படம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நாளை (17ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. மேலும் இந்த தொடரில் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


இந்த நிலையில் நாளை துவங்க உள்ள ஒருநாள் தொடரை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. காரணம் ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகமாக இருப்பதுதான்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களால் இந்த தொடர் கடும் சவால்களை ரோஹித் சர்மாவுக்கு அளிக்கக்கூடும் என கூறப்படுகிறது.


மேலும் அஹமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4வது நாளில் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக பேட்டிங் செய்யாமலேயே போட்டியிலிருந்து விலகினார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி காயத்திலிருந்து மீள பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்ரேயாஸ் அய்யர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கும்போது, தொடக்க வீரராக ரோகித் சர்மாவும், சுப்மன் கில் தான் விளையாடுவார்கள். தற்போது கே எல் ராகுல் ஒரு நாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்படுவதால் இந்த ஜோடி தான் உலகக்கோப்பை தொடரில் விளையாடும்.

நடுவரிசை இதேபோன்று 3வது இடத்தில் விராட் கோலி விளையாடுவார். 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இடம்பெறாத நிலையில், அந்த இடம் சூரிய குமார் யாதவ்க்கு கிடைக்கும். இதேபோன்று 5ம் இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே எல் ராகுல் இடம் பெறுவார். ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரவீந்திர ஜடேஜா 7வது இடத்தில் ஒரு நாள் அணியில் பங்கேற்பார்.


பந்துவீச்சாளர்கள் எட்டாவது இடத்திற்கு முகமது ஷமியும், ஒன்பதாவது இடத்திற்கு முகமது சிராஜும், பத்தாவது இடத்தில் உம்ரான் மாலிக் அல்லது ஷர்துல் தாக்கூர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று பதினொன்றாவது வீரராக இரண்டாவது சுழற் பந்துவீச்சாளருக்கான இடத்தில் சாகல் அல்லது குல்தீப் யாதவ் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. ரன்குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்து வீசும் என எதிர்பார்க்கலாம்.

பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா,சுப்மன் கில், விராட் கோலி,சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா,முகமது ஷமி, முகமது சிராஜ், உமரான் மாலிக்/ ஷர்துல் தாக்கூர், சாஹல் / குல்தீப் யாதவ்.

Updated On: 16 March 2023 4:56 AM GMT

Related News