/* */

பூரனின் அதிரடியால் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி! ரசிகர்கள் ஏமாற்றம்!

இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி

HIGHLIGHTS

பூரனின் அதிரடியால் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி! ரசிகர்கள் ஏமாற்றம்!
X

இந்திய அணி மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வரும் ஆசிய கோப்பை, உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பயம் கொள்கின்றனர் ரசிகர்கள்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில் டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது.

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்தது. இதனால் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி கயானாவில் தொடங்கி நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணியின் துவக்க வீரர்களாக இஷன் கிஷன், சுப்மன் கில் இருவரும் தங்களது பொறுப்பற்ற விளையாட்டால் விரைவில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இஷன் கிஷன் 27 ரன்கள் எடுத்தாலும் சுப்மன் கில் 7 ரன்களில் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். திலக் வர்மா நிதானமாக ஆடி 50 ரன்களைக் கடந்தார். சஞ்சு சாம்சன் 7, பாண்டியா 24, அக்ஷர் படேல் 14, பிஷ்ணோய் 8, அர்ஷ்தீப் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்திய அணி.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 67 ரன்கள் எடுத்தார். பவல் 22 ரன்களும் ஹெட்மயர் 21 ரன்களும், ஹொசைன் 16 ரன்களும் ஜோசம் 10 ரன்களும் எடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக தனது இலக்கைத் துரத்தி எட்டியது.

7 பந்துகள் மீதமிருக்கையிலேயே 8 விக்கெட்டுகள் இழப்புடன் 155 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி. பாண்டியா 3 விக்கெட்டுகளையும் சஹல் 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர்.

Updated On: 9 Aug 2023 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்