/* */

அகில இந்திய கிரிக்கெட் கவுன்சில்; ஐசிசி புதிய சேர்மனுக்கு நவம்பரில் தேர்தல்

அகில இந்திய கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு விரைவில் இம்மாதம் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய சேர்மன் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஐசிசி சார்பில் பர்மிங்காமில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அகில இந்திய கிரிக்கெட் கவுன்சில்; ஐசிசி  புதிய சேர்மனுக்கு நவம்பரில் தேர்தல்
X

மும்பை; அகில இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கான (ஐசிசி) புதிய சேர்மனுக்கான தேர்தலை நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அப்ரூவலை ஐசிசி அளித்துள்ளதால் நவம்பரில் புதிய சேர்மன் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பர்மிங்காமில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த சேர்மன் கிரேக் பார்க்லே கடந்த இரண்டாண்டுகளுக்கு மு்ன்பாக அதாவது 2020ம் ஆண்டு நவம்பர் 24 ந்தேதி பொறுப்பேற்றார். அவருடைய இரண்டு வருட பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிவடைவதால் ஐசிசி சேர்மனை புதியதாக தேர்ந்தெடுக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது. தற்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் சேர்மனின் பதவிக்காலமும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. அதாவது டிசம்பர் 1 2022 முதல் 30 நவம்பர் 2024 வரை.

இத்தேர்தலைப் பொறுத்தவரை பெருவாரியான மெஜாரிட்டியை பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. 51 சதவீத ஓட்டுகள் பெற்றாலே அவர்தான் சேர்மனாக பதவியேற்கலாம். மேலும் 16 மெம்பர் கொண்ட டைரக்டர்கள் குழுவில் 9 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நபருக்கு ஆதரவாக வாக்களித்தால் போதும் அவரே சேர்மன் ஆவார். தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பிலுள்ள முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலியும் இத்தேர்தலில் போட்டியிட லாமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் இந்திய இன்டர்நேஷனல் மற்றும் தற்போதைய நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் மற்றும் முன்னாள் நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி ஆகிய இருவரும் ஐசிசியின் ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கான குழுவில் தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கான ஆலோகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கிரிக்கெட் அணி துவங்குவது குறித்து விரைவில் ஐசிசி குழு நேரில் சந்தித்து ஆலோசித்து விரைவில் முடிவினை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 July 2022 6:46 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...