/* */

ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானார்..!

ஜிம்பாப்வேயின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49வது வயதில் காலமானார்

HIGHLIGHTS

ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானார்..!
X

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக்(கோப்பு படம்)

Heath Streak passed away in tamil, Heath Streak legendary Zimbabwe cricketer dies, Heath Streak, legendary Zimbabwe cricketer passed away, Heath Streak legendary cricketer passed away


தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஹீத் ஸ்ட்ரீக் திடீரென காலமானார். அவரது உறவினர்களும் நண்பர்களும் பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். என்று விவரித்துள்ளனர்.

49 வயதான புகழ்பெற்ற ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயுடன் நீண்டகாலமாக போராடி வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் இருந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் தெரிவித்தனர். புற்றுநோய் கண்டறிந்த பின்னர் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

Heath Streak passed away in tamil

ஹென்றி ஒலோங்கா, ஜிம்பாப்வேயின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஸ்ட்ரீக்கின் நீண்ட கால அணி வீரரும், தற்போதைய ஜிம்பாப்வே கேப்டனுமான சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தங்களது இரங்கலை சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என அழைக்கப்பட்டது) -ல் பதிவிட்டுள்ளனர்.


"ஹீத் ஸ்ட்ரீக் உங்களின் மறைவு எங்களை சோகமான நிலைக்குத் தள்ளிவிட்டது. RIP @ZimCricketv லெஜண்ட். நாங்கள் உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் நீங்கள். உங்களுடன் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பந்துவீச்சு ஸ்பெல் முடிவடையும் போது உங்களை மறுபக்கம் வந்து சந்திப்போம். ," என்று ஓலாங்கா பதிவிட்டுள்ளார்.

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எனக்கும் மட்டுமல்ல பலருக்கும் என்ன செய்துள்ளீர்கள் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது, ஸ்ட்ரீக்கி" என்று சீன் வில்லியம்ஸ் பதிவிட்டுள்ளார்.


Heath Streak passed away in tamil

எவ்வாறாயினும், ஸ்ட்ரீக்கின் குடும்பத்தினரிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த இணைப்பை க்ளிக் செய்து பதிவு காணலாம்.

https://twitter.com/sean14williams/status/1694106532948922586?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694106532948922586%7Ctwgr%5Ed868b15e705a6fe5f3011bb992ea85946cf6a8bb%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fcricket%2Fheath-streak-legendary-zimbabwe-cricketer-dies-at-49-101692755056996.html

Updated On: 23 Aug 2023 5:44 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  5. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  9. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  10. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து